Video

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

வைரமுத்து - கவிதை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கவிபேரரசு வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றவர்.


நேற்று இரவு இவரது கவிதை தொகுப்பினை படிக்க நேரம் கிடைத்தது. அதில் எனக்கு பிடித்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு...

வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்...

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்!

உன் பார்வை
கொஞ்சம்
விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்!

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்!

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்!

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்!

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
என் புத்தகம் தேடு
இருக்கும்!

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்!

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்!

நீ அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்!

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்!

நீ சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்!

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்!

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி!

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி!

நன்றி : கவிபேரரசு வைரமுத்து

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

வைரமுத்து - ரஜினி - கவிதை - பாடல்

வாழ்க்கையை மிக சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய பாடல் “ரா ரா ரா ராமய்யா, எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்.

1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி, R.M.வீரப்பன் சத்யா மூவிஸ் பேனரில் தயாரித்து வெளிவந்து, மெகா ஹிட் ஆன படம் "பாட்சா" என்பதை உலகறியும்.

ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் "பாட்சா" படத்திற்கு உண்டு.

இந்த “ரா ரா ரா ராமய்யா..." பாடலுக்கு தேவையான கருத்துகளை தனது கவிதையிலேயே எடுத்து புதுப்பித்த அல்லது அதன் ஆதி மூலமாய் அமைந்த வைரமுத்துவின் கவிதை இதோ...


அந்தந்த வயதுகளில்..!

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம்
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்...
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது...
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!



இந்த கவிதையை ரஜினிக்கு தகுந்தார் போல மாற்றி ஒரு தத்துவ பாடலாக உருவாக்கிய வைரமுத்து என்னவென்று சொல்ல....!!!
ரா ரா ரா ராமய்யா....
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா...
இக்கட ரா ரா ரா ராமய்யா....
அதை புட்டு புட்டு வைக்கபோறேன் பாரய்யா ....

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
அதை புத்திக்கு எட்டும் படி சொல்லப்போறேன் கேளய்யா
இக்கட ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா

என்று தொடங்கும் அந்த பாடல், பின் வரும் 8, 8 ஆக வாழ்க்கையை பிரிக்கும் விஷயங்களை உள்ளடக்கியது....

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

நான் ரசித்த மூன்று கவிதைகள்!!!

சில நாட்களுக்கு முன்னர் வலையில் உலா வந்த போது என் கண்ணில் சிக்கிய சில கவிதைகள் உங்களால் பார்வைக்கு.....
அல்லது - பெண்!

கருவில் சுமந்து
உயிர் கொடுத்த தாயாக!
அல்லது,
அவளே என்னைப் படைத்த
கடவுளாக!

கைப் பிடித்து
கொஞ்சி விளையாடும் சகோதரியா!
அல்லது,
அவளே எனக்கு பாசவலையிட்ட
உயிராக!

உணர்வை பகிர்ந்து
இறுதிவரை தோள்கொடுத்த தோழியாக!
அல்லது,
அவளே என்னை உற்சாகமூட்டவந்த
தேவதையாக!

மனதை திருடி
உயிருடன் கலந்த காதலியாக!
அல்லது,
அவளே எனக்கென்று பிறந்த
அழகியாக!

மாலையிட்டு மணக்கோலத்துடன்
வாழ்க்கையை பகிரவந்த மனைவியாக!
அல்லது,
அவளே எனக்கு மற்றுமொரு
தாயாக!

கொஞ்சும் மொழியில்
என்னை மறக்கசெய்யும் மகளாக!
அல்லது,
அவளே எனக்கு இறைவனளித்த
பரிசாக!

இந்த உலகை
சொர்க்கமாக்க வந்த பெண்களாக!
அல்லது,
இவர்கள் இல்லா உலகம்
சூன்னியமாக!

- sipi


வானத்துக்கு மேலே...

மரத்தடியில் நிற்காமல்
மரமாகவே நின்றுகொண்டும்

பூக்களையெல்லாம் பறிக்காமல்
பூக்களாகவே சிரித்துக்கொண்டும்

வண்டுகளை விரட்டாமல்
வண்டாக தேனுறிஞ்சிக்கொண்டும்

மழையில் நனையாமல்
மழையாகவே நனைந்துகொண்டும்

பறவைகளை வீழ்த்தாமல்
பறவையாகவே சிறகுவிரித்துக்கொண்டும்

சரித்தரங்களை படிக்காமல்
சரித்தரம் படைத்துக்கொண்டும்

வானம்பாடிகளை தேடாமல்
வானம்பாடியாக பாடிக்கொண்டும்

சங்கீதம் கேட்காமல்
சுரங்களாகவே மாறிக்கொண்டும்

ரத்தசத்தங்கள் இல்லாமல்
மாந்தர் கண்படாமல்

மந்திரஉலகம் இருக்குமா?
வானத்துக்கு மேலே?

-மோ.அபிலாஷ்


இமயம் வேண்டாம்...

எனக்கு இமயம் வேண்டாம்
குன்று போதும்
அல்லது
ஒரு கல்துண்டு மட்டும்!

எனக்கு கங்கை வேண்டாம்
நீரோடை போதும்
அல்லது
இலையில் ஓர் துளி மட்டும்!

எனக்கு வானம் வேண்டாம்
மேகம் போதும்
அல்லது
ஒரு நட்சத்திரம் மட்டும்!

எனக்கு ஆழ்கடல் வேண்டாம்
அலைகள் போதும்
அல்லது
அதன் சிதறல் மட்டும்!

எனக்கு பெருமழை வேண்டாம்
தூறல் போதும்
அல்லது
மண்வாசம் மட்டும்!

எனக்கு வைரம் வேண்டாம்
பவளம் போதும்
அல்லது
ஒரு முத்து மட்டும்!

எனக்கு நூலகம் வேண்டாம்
புத்தகம் போதும்
அல்லது
ஒரு தாள் மட்டும்!

எனக்கு மதங்கள் வேண்டாம்
கடவுள் போதும்
அல்லது
மந்திரச்சொல் மட்டும்!

எனக்கு சூரியன் வேண்டாம்
நிலவு போதும்
அல்லது
ஒரு மின்மினி மட்டும்!

எனக்கு காதல் வேண்டாம
நினைவுகள் போதும்
அல்லது
ஒரு முத்தம் மட்டும்!

எனக்கு சரித்திரம் வேண்டாம்
சம்பவங்கள் போதும்
அல்லது
ஒரு சாகசம் மட்டும்!

எனக்கு மெத்தைகள் வேண்டாம்
தாய்மடி போதும்
அல்லது
ஆறடி பூமி மட்டும!

இவை எல்லாம் நடக்க வேண்டாம்
எல்லோரும் நினைக்கவாவது வேண்டும்
அல்லது
இப்படி நிழல்களில் மட்டும்!

-அபிலாஷ்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

காதலித்து பார் - வைரமுத்து கவிதை

எனக்கு பிடித்த கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள (அல்லது) நினைவூட்ட எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பமாக இத்தனை நினைக்கிறேன்.

இந்த கவிதையை பிரசாந்த் + சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் கவினரே இந்த கவிதையை சொல்வது போல அமைத்தார் பட இயக்குனர்.

காதலித்து பார்
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்

தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்

இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்

பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?

அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்

சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்

சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

கவிதை காதலி

காதலர் தினத்தில் கவிதையை காதலிப்பவர்களுக்கு...

நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!

நன்றி - பார்தீ



இந்த உலகத்தில் நான்
யாரோ ஒருவன் இல்லை…
யாரோ ஒருத்திக்கு நானே
உலகமாய் இருக்கின்றேன்!

நன்றி - பார்தீ



நமக்கான இடைவெளியில்
காற்றோடு அன்பையும் விதைத்த உனக்கு
என்னிடமிருந்து
என்ன வேண்டும் என்றேன்...
எதுவுமே வேண்டாம் என்றாய்
என் அழகான திடுக்கிடலை
அன்பாக ரசித்தபடி...
பிறகுதான் சொன்னாய்.
உன்னைத்தவிர என்று!

நன்றி - மருதம் ஷ.ப.கஜலட்சுமி


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன்

இந்த வருடத்தின் கடைசி இடுக்கையை என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன்.

உலகிலேயே...
மிகவும் அழகானது பூ
மிகவும் அதிசயமானது தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது சூரியன்
மிகவும் குளுமையானது நிலவு
மிகவும் தெளிவானது நதி
மிகவும் இனிமையானது தென்றல்
ஆனாலும்...
இவை எதுவும் ஈடு இல்லை
எனது அம்மாவின்
எல்லாம் வல்ல அன்பிற்கு!


நன்றி - உணர்வுகள்


என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி

நன்றி - நிலா

முகம் தெரியாதான் இந்த நண்பனின் அம்மா கவிதையை பிரசுரம் செய்வதில் எனக்கும் பெருமையே.

இது என்ன கவிதைகள் !?

இரண்டு நாட்களுக்கு முன்பு சில கவிதை தொகுப்புகளை படிக்க நேர்த்தது. பல கவிதைகள் படித்தாலும் சில மற்றும் மனதில் ஏதே செய்வது போல இருந்தது. கடவுளை மையமாக வைத்து பல கவிதைகளை படித்துள்ளேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த சில உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.

திரு பி.மணிகண்டன் அவர்கள் எழுதிய "முரண்" என்ற தலைப்பில் வெளியான ஒரு சிறு கவிதை என்னை வெகுவாக கவர்ந்தது. இதோ...
முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னால்
அம்மா
"அடிக்காதே பா
அது
கருப்புசாமிக்கு நேர்ந்துவிட்டது"
திரு எம்.மாரியப்பன் எழுதிய ஒரு கவிதை "நடைபாதை ஓவியன்". நடைபாதையில் அன்றாடம் நாம் காணும் சில மரிதர்களின் நிலை பாடை இவ்வளவு அழகாக சொல்லமுடியாது.
கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்று பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.

திரு மாசிலா விநாயகமூர்த்தி எழுதிய ஒரு கவிதையில் எனக்கு மிகவும் பிடித்தது "பக்தி". நம்மையே கேள்வி கேட்டும் இந்த கவிதை...
நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிக்கொண்டிருகிறது மனது
எதை வேண்டி
எதை பெறுவது?
திரு புன்னை சேது அவர்கள் எழுதிய "மாற்றங்கள்" என்ற தலைப்பில் ஒரு கவிதை படித்தேன். பல சிந்தனைகள் மனதில் கேள்விகளாக... இதோ அந்த கவிதை உங்களுக்காக....
பிரகாரம் நுழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை...
தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்...
பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்...
எந்த மாற்றம்மின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.
குறிப்பு : இங்கே வெளியான கமல் - கடவுள் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியானு நீங்க கேட்பது தெரியுது. என்ன செய்ய.... !?

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

அறிவுமதி கவிதைகள் - 'வலி'

கவிதை எழுத்தாளர் அறிவுமதி அவர்களின் கவிதை தொகுப்பை படித்தேன், நேற்று இரவு. 'வலி' என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களின் உள்ள குமுறலையும் அவர்களது நிலைபாடுகளையும் தனது கவிதை வாயிலாக அவர் சொல்லும் போதே நமது மனது சேர்த்து வலிக்கத்தான் செய்கிறது.

புலம்பெயர்ந்த மக்களின் ஒட்டு மொத்த குரலாக - ஆயிரம் கதைகளை சொல்லும் இவரது கவிதை இங்கே...
முகாமிக்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது
"யாதும் ஊரே
யாவரும் கேளிர்"

வறுமை, இன்றைய ஈழ தமிழர்களின் நிலை, அவர்களது வாழ்வாதாரம் பற்றி நிலைப்பாடுகளை கவினர் இப்படி சொல்லுகிறார் தனது கவிதையில்...
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!

*

இராமேஷ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்து
கரையேறுகிறோம்!
உயிருடன் இருக்கும் போது தான் காசு, பணம், வீடு என் அலையும் மனிதர்களுக்கு இவாறு சொல்கிறார்.
பிறந்த குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!
தினம் தினம் மரண செய்திகளை படிக்கும் நமக்கே தாங்கிகொள்ளமுடியவில்லையே ... தம் குடுப்பத்தை இழந்த- ஈழ தமிழர்கள் நிலையை அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும், உண்மை நிலையும் அதன் வலி தெரியும்.
இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீங்கள்!
நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம் !

நன்றி : அறிவுமதி

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

ஒரு தாயின் முதல் கவிதை - 'வேதனை'

இன்று காலை எனக்கு ஒரு கடிதம் ஒற்றை கொடுத்தாள், என் தோழி ஒருவள். அதில், 'வேதனை' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதபட்டிருந்தது. அது அவளது தாயார், வீட்டு வேலைகள் முடித்த பின்னை கிடைக்கும் சில நேரங்களில் மனதிற்கு தோன்றும் சில எண்ணக்களை கவிதையாக எழுதும் வழக்கம் உள்ளதாகவும், எழுதப்படும் கவிதைகளை முறைப்படி சேகரிக்கவில்லை எனவும், கடந்த வாரம் எழுதிய கவிதை ஒற்றை எடுத்துவந்துவிட்டதாக சொன்னாள்.

மேலும், படித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ப்ளொக்கில்(blog) பதிவிடுங்கள் என்று கேட்டுகொள்ள - நானும் ஒரு தாயின் கவிதை, சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை பட்டு இங்கே பிரசவிக்கிறேன்.

நீங்களும் படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் இங்கே தெரிவிக்கவும். அவைகள் இந்த கவிதை எழுதிய தாயிடம் சென்று சேரும் இந்த பதிவின் வழியாக...

வேதனை

நிழல்படமாய் என் வீட்டு சுவற்றில்
நினைத்து பார்க்க முடியவில்லை - உன் பிரிவை
நிற்கதியானேன் ! நினைவிழந்து போனேன்
நீயே என் நிதி! இனி யார் என் கத்தி ?...

கணவன் அமைவது கடவுள்
கொடுத்த வரமெனில் - அன்பே
நீ எனக்கு வரம்
கொடுத்தவனுக்கு இரக்கமே இல்லையா ?
என்னில் உன்னை எடுத்து சென்றான்...

வாழ்ந்தது சில மாதங்களே
வருடமும் ஆகவில்லை
வாழ்விழந்து போனதேன்!
வஞ்சி நான் செய்த வினைதானென்ன?...

என்னுயிரை எடுத்து சென்றாய்
நடை பிணமானேன்...
பின்னும் வாழ்கிறேன் - ஏன்
உன்னுயிர் என் கருவுக்குள் ...

இனியவனே அன்று உன் அணைப்பில்
என்னை மறந்தேன் - மன்னவா!
மீண்டும் வா என் மகனாய்
என் அணைப்பில் உன்னை இறுக்கிக் கொள்ள...
நன்றி : கடிதம் கொண்டு வந்து சேர்த்த சிவதர்ஷினி அவர்களுக்கு என் நன்றிகள். உங்கள் அன்னையின் கவிதை பயணம் தொடர என் வாழ்த்துகள்!

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி! மீண்டும் வருக!!!

நவீன தாலாட்டு - கவியரசு வைரமுத்து


இந்தியாவுக்கு ஒரு ஆகத்து 15 வந்து விட்டது. இந்திய பெண்களுக்கு ஆகத்து 15 எப்போது?. பொருளாதார உதவி கிடைத்துவிட்டதால் பூட்டியிருந்த விலங்கு நொறுங்கி விடும் என்று கருதினர், போன நுற்றாண்டு பெண்.

ஆனால், பொருளாதார விடுதலை கூட கூட சில புதிய விலங்குகளை பூட்டியிருந்தது என்று இனம் கண்டு கொண்டவள் இந்த நுற்றாண்டு பெண். சிறகு இருந்தும் பறக்க முடியவில்லை என்று விமியவன் வீட்டுக்குள் இருந்த பெண்.

பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லை என்று விசுபுகிறவள் வேலைக்கு போகிற பெண்.

வேலைக்கு போகும் பெண்ண தன் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை கொஞ்சம் நஞ்சமில்லை. போன ௧0 ஆண்டில் ஒரு காலும் இந்த நுற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை திரிசங்கு சொர்கத்தில் திவிகிறாள்.

அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின் அவசர தாலாட்டு தான் கவியரசு வைரமுத்து சொல்லும் இந்த கவிதை.

இந்த அவசர நுற்றாண்டில் இருதயம் துடிக்கும் இயந்திரங்களாய் மாறிவிட்டது. மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு வயலின் வாசிக்கிறான். அடுப்பில் உட்கார்ந்துகொண்டு காதலிக்கிறான். கணவனும் மனைவியும் இண்டர்போளில்தாம்பத்தியம் நடுத்துகிறார்கள்.
குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது. காதலிக்கு வாங்கிய மல்லிகை பூ டீசல் புகையில் கருபாகிவிடுகிறது. இப்படி நிறம் மாறும் ஒரு வாழ்க்கையில் தாய் பாடும் ஒரு தாலாட்டு மட்டும் தடம் மாறிபோகாமல் இருக்குமா என்ன? எனவே தான் ஒரு குழந்தைக்கு முன்னிரவில் பாட பட வேண்டிய தாலாட்டு முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது.

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!

உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிட்டு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.

ராத்திரி ராகம் - அலைபாயதே - வைரமுத்து

இரவு. மொட்டைமாடி. தனிமை. தொலைந்து போன நட்சத்திரங்கள். சொல்ல முடியாத சோகத்தில் ஒரு பெண்.

வானம். உடைந்த நிலா. சிறு துண்டு மேகங்கள். தென்னக்கீருகளை வம்புக்கு இழுக்கும் தென்றல். சொல்ல முடியாத சோகத்தில் ஒரு பெண்.

ஒவ்வொரு இரவிலும் ஒரு புல்லாங்குழல் காற்றில் கசிந்து கசிந்து அவள் காதில் விழுகிறது. கண்ணுக்கு தெரியாத அவள் புண்ணுக்கு அது களிம்பு தடவுகிறது. சொல்ல தெரியாத சோகத்தை அது அள்ளிக்கொண்டு போகிறது.

அந்த புல்லங்குழல் கேட்டால், இமை பறவை அடங்கிவிட, மனப்பறவை துடிகிறதே? ஏன்?சொல்லாமல் வரும் விருந்தாளியை போல அவள் கண்ணிலிருந்து ஒரு துளி, அவள் கன்னத்தில் குதிகிறதே? ஏன்?

சோகங்கள் முழுக்க இறக்கிவிடும் அளவுக்கு அத்தனை வார்த்தைகளும் அகலமில்லை. அர்த்தகளின் வரையறைக்கு உட்பட்டது வார்த்தை. அர்த்தங்களின் வரையறைக்கு உட்பாடாததே வாழ்க்கை. எனவே தான் வரையறுக்கப்பட்ட வார்த்தைககளைகொண்டு வரையறுக்க படாத வாழ்க்கையை விளக்குவது சாத்தியமில்லை. இதோ, இந்த கவிதையில் வரும் இவளும் வார்த்தைகளில் கைவிடப்பட்டவள் அல்லது வார்த்தைகளால் கைவிடப்பட்டவள்.

கவிப்பேரரசு வைரமுத்து, தன் பழுத்த வார்த்தைகளில் ஒரு பெண்ணின் ஆத்மா பேசுகிறது. உயிரை தடவும் இந்த குரலில் ஒரு பெண்ணின் இதயம் துடிக்கிறது. புல்லாங்குழல்-க்கும் அவளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்புல்லாங்குழல் பல கண்களால் அழுகிறது. இவள் இரு கண்களால் அழுகிறாள்.

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - நான்
இருட்டில் இருந்து யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்!

கேட்டு கேட்டு கலங்குகிறேன் - நான்
கேட்பதை அவனோ அறியவில்லை!
காட்டு மூக்கிளின் காதுக்குள்ளே - அவன்
ஊதும் ரகசியம் ப்புரியவில்லை!

இதயம் கணக்கும் இரவுகளில் - அந்த
இங்கீத ராகம் டென்வார்க்கும்!
புதிய ராகத்தில் புல்லெடுத்து - அந்த
புல்லான்குலலே பூபூக்கும்!

கானம் கேட்கும் பொழுதுகளில் - என்
கண்கள் அழுவதை அறியவில்லை!
ஏனோ கண்ணீர் கசிகிறது - இது
எந்த ஜாதியோ தெரியவில்லை!

உறக்கம் இல்ல முன்னிரவில் - என்
உள் மதில் ஒரு மாறுதலாய்!
இறக்கம் இல்லா இரவுகளில் - இது
எவனோ அனுப்பும் ஆறுதலாய் !

ஏகாந்தத்தின் இனிமைலே - என்
இமையே மெல்ல இறங்கிவிடு!
மோக குழலில் ஊறிவரும் - இசை
முடியும் போது உறங்கிவிடும்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - நான்
இருட்டில் இருந்து யாசிக்கிறேன்!
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் - அதை
தவணை முறையில் நேசிக்கிறேன்!

'அலைபாயதே' என்ற படத்தில் இந்த கவிதையை பாடலாக பதிவு செய்திருப்பார் டைரக்டர் மணிரத்தினம். இதற்கு மிகசிறப்பான முறையில் இசை சேர்த்து நம்மை ரசிக்க வைத்திருப்பார் A.R.ரகுமான். நேரம் கிடைத்தால் இந்த கவிதைகளோடு அந்த பாடலயும் கேட்டு மகிழுங்கள் என்னைபோலவே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.

என் தாய்க்கு ஒரு கவிதை


தாயை இழந்த (என்னை போல) வாடும் இதயக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதைகளின் ஒரு தொகுப்பு "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்". இவர் செதுக்கிய இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள (அல்லது) நினைவூட்ட எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பமாக இத்தனை நினைக்கிறேன்.


பெற்ற தாயின் அருமை, அருகில் இருக்கும்போது நமக்கு விளங்குவதில்லை. சுயநலமற்ற தாயின் சேவையை விட ஒரு சிறந்த சேவையை நாம் எவ்வளவு காசு கொடுத்தும் பெறமுடியாது.

அன்னையை பற்றி ஒரு கவிதை "முதன் முதலாய் அம்மாவுக்கு... " என்ற கவிதையை படிக்கும்போது என் இதயம் கனத்தது. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்த்திவலைகள். இதோ

முதன்முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரந்தான் கவி சொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே!
குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல ...
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!

கண்ணு காது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்த ஒன்ன
நெனச்சா அழுக வரும் ...

கதகதன்னு களி கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா...

கொத்தமல்லி வறுத்து வச்சுக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழ கொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்...

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும் ...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்..
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போன பின்னே
அஞ்சாறு வருசம் உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
....(மௌனம்)
....
வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- வைரமுத்து

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.