Video

Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

ரஜினி சொன்ன சில குட்டி கதைகள்

'சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் பொதுமேடைகளில் அவ்வபோது சிறு சிறு கதைகளை சொல்வது வழக்கம். அதில் எனக்கு பிடித்தவைகள் சில அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...


பக்காவா பிளான் பண்ணனும்... இல்லைனா ..?!

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பபடுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்ல 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா "நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."

பயந்தா ஜெயிக்கிறது எப்படி…!

மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம்.

மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, ‘போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது’ என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது.

அதே குரல், ஆனா தவளை கண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது. இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம்பித்தது.

அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங் களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி. ‘அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது.

நாமளும் அப்படித்தான்… பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும். பயந்தா ஜெயிக்கிறது எப்படி?,’ என்றார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

வைரமுத்து - ரஜினி - கவிதை - பாடல்

வாழ்க்கையை மிக சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய பாடல் “ரா ரா ரா ராமய்யா, எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்.

1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி, R.M.வீரப்பன் சத்யா மூவிஸ் பேனரில் தயாரித்து வெளிவந்து, மெகா ஹிட் ஆன படம் "பாட்சா" என்பதை உலகறியும்.

ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் "பாட்சா" படத்திற்கு உண்டு.

இந்த “ரா ரா ரா ராமய்யா..." பாடலுக்கு தேவையான கருத்துகளை தனது கவிதையிலேயே எடுத்து புதுப்பித்த அல்லது அதன் ஆதி மூலமாய் அமைந்த வைரமுத்துவின் கவிதை இதோ...


அந்தந்த வயதுகளில்..!

இருபதுகளில்...

எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...
ஜன்னல்களை திறந்து வை...
படி.. எதையும் படி...
வாத்சாயனம் கூடக் காமம் அல்ல - கல்வி தான் படி...
உன் சட்டைப் பொத்தான் கடிகாரம்
காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்து விட்டதால் எந்திர அறிவுக் கொள்...
சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி
பூமியில் நின்று வானத்தைப் பார்...
வானத்தில் நின்று பூமியைப் பார்...
உன் திசையை தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி
காதலை சுகி காதலில் அழு...
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி
வாழ்க்கை என்பது உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு நிதானத்தில் ஞானியாய் இரு...
உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிகொள்
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை ஒழித்து வைத்திருப்பான்... கைப்பற்று...
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே...
எதிரிகளை பேசவிடு.. சிறுநீர் கழிக்கையில் சிரி...
வேர்களை இடிப் பிழக்காத ஆழத்துக்கு அனுப்பு...
கிளைகளை சூரியனுக்கு நிழழ் கொடுக்கும் உயரத்திற்கு பரப்பு...
நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம்
செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி
எதிரிகளை ஒழி..
ஆயுதங்களை மண்டை ஓடுகளில் தீட்டு
பொருள் சேர்
இரு கையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு
பகல் தூக்கம் போடு
கவனம்... இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ... புடவை தொடாதே...
இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு...
இனிமேல் இலட்சியத்திற்கு நீதான் இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி
கொழுப்பை குறை... முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்
கணக்குப்பார்
நீ மனிதனா என்று வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது...
இனியேனும் வாழ்க்கையை நீ வாழ்...
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விழக்கி விடு...
மனிதர்கள் போதும்
முயல்கள் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்குப் பேன்பார்
பழைய டைரி எடு... இப்போதாவது உண்மை எழுது...

எழுபதுகளில்...

இந்தியாவில் இது உபரி...
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன..!!!



இந்த கவிதையை ரஜினிக்கு தகுந்தார் போல மாற்றி ஒரு தத்துவ பாடலாக உருவாக்கிய வைரமுத்து என்னவென்று சொல்ல....!!!
ரா ரா ரா ராமய்யா....
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா...
இக்கட ரா ரா ரா ராமய்யா....
அதை புட்டு புட்டு வைக்கபோறேன் பாரய்யா ....

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
அதை புத்திக்கு எட்டும் படி சொல்லப்போறேன் கேளய்யா
இக்கட ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா

என்று தொடங்கும் அந்த பாடல், பின் வரும் 8, 8 ஆக வாழ்க்கையை பிரிக்கும் விஷயங்களை உள்ளடக்கியது....

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

எந்திரன் - விமர்சனம் அல்ல.

நம்ப சூப்பர் ஸ்டார்ட் எந்திரன் படம் முதல் நாள் ... முதல் ஷோ... பார்க்காம இருந்தா எப்படி....? சுட சுட படத்த பார்த்து இதை எழுதறேனுகோ.

ஒரு வழியா முட்டி மோதி டிக்கெட் வாங்கி படத்த பார்த்த பிறகு கிடைக்கும் திருப்தி இருக்கே... அட அட..... ரஜினி ரஜினி தான். வயசானாலும் அவருடைய ஸ்டைலே தனி தான். இன்னும் எத்தனை வரும் ஆனாலும் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என்பது நிஜம்.


படத்தின் கதையை சொல்லிவிட்டால் சுவாரிசியம் இருக்காது. படத்த பார்த்துவிட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

'பிரமாண்ட இயக்குனர்' சங்கர் - கனவு படத்தை எடுத்த திருப்தி + வெற்றிகரமாக ஓடவைத்து இருக்கிறார். திரைகதையை கையாண்ட விதம் மிக அருமை. ரஜினி என்ற நடிகரை தனது இயக்கத்தில் முற்றிலும் மறைத்து கதையின் நாயகனாக உலா விட்டிருப்பது சிறப்பு. நல்ல வேலை.... ரஜினிக்கு ஒபெனிங் சாங் வைக்காமல் புண்ணியம் செய்துகொண்டார். கடைசி 30 நிமிஷம் நன்மை கட்டிபோடுகிறார். படம் முழுவதும் கிராபிக்ஸ் மிரட்டல்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினி - இரட்டை வேடத்தில் மனுசர் சும்மா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். என்திரனாக அவரது நடிப்பும் இடைவேளை வரும்போது மானும் அவரது முகபாவனைகள்.... நடிப்பில் சும்மா சென்சுரி அடிக்கிறார். ரஜினியின் பஞ்ச் டயலாக், மிரட்டல் சண்டைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ....
'இரட்டை ஆஸ்கார் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் - சங்கரை போலவே படம் முழுவதும் இவரது இசை ஒரு ஹாலிவுட் படம் பார்த்த திருதியை தருவதை நம்பால் நிச்சயம் உணர முடியும். காதல் அணுக்கள் & கிளிமஞ்சாரோ பாடல்கள் முனு முணுக்க வைக்கிறது. மற்றவைகள்...சுமார் தான். இறுதியில் SBP சார் படம் ஒரு குறும் பாடல் அழகு. ரகுமானை தொடர்ந்து விரைவில் சங்கரும் ஹாலிவுட் சென்றுவிடுவார்.

'தயாரிப்பு' சன் பிச்சர் - சங்கரின் கனவை நினைவாகிய பெருமை இவர்களையே சாரும். இந்த படத்தை இவர்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது என்பதே நிஜம். சாதாரண படத்தையே நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைத்துவிடுவார்கள். என்திரனை சொல்லவா வேண்டும்? படமும் சூப்பர் ஹிட். சன் இனி துணித்து பல படங்களை எடுக்க வருவார்கள். நாள் படங்களை எடுத்தால் நன்று. வாழ்த்துக்கள்.

'முன்னால் உலக அழகி' ஐஸ்வர்யா ராய் - ஜீன்ஸில் பார்த்த ஐஸ் இதில் மிஸ்ஸிங்... முடித்த வரை கதையின் ஓட்டத்தில் வருகிறார். ரஜினிக்கு பல முத்தங்களை தந்து அவ்போது நம்மையும் சூடேற்றுகிறார். முகத்தில் வயதான தோற்றம் நன்கு தெரியுது.

சந்தானம், கருணாஸ், மறைந்த ஹனிபா - சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.

ரசுல்குட்டியும் இரண்டாம் பாதியில் மிக அதிகமாக வேலை செய்துள்ளார். சபாஸ்.


ரொம்ப ரசித்தது
  • கிளிமஞ்சாரோ பாடல்
  • ரோபோ ஒரு கைக்குழந்தையுடன் விளையாடும் இடமும்

  • ராகவ் வரும் காட்சியில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அந்த ரயில் சண்டை.... யம்மாடி.... சான்சே இல்ல.

  • ஹனிபாவுடன் போட்டிபோட்டு பேசும் இடம்.... ஹைலைட்.

  • எஜமான் படத்துல பட்டம் பூச்சி பிடிப்பது போல இங்கே கொசுவை தேடி போவதும் அதன் பிறகு நடப்பது ரசிக்க கூடியவைகள்.

  • காதல் காட்சியில் 'ஐஸை' முத்தம் திருப்பி தர கேட்டு மடக்கும் காட்சியில் ரஜினி - மாஸ் தான்.

முதல் பாதி - சிரிப்பு வெடி
இரண்டாம் பாதி - கிராபிக்ஸ் மிரட்டல்

எந்திரன் = கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.

ரஜினி மந்திரம்

பிரபல நடிகர்கள் பலரும் தெய்வ நம்பிக்கையுடன் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் இருவர். ஓன்று நடிகர் அர்ஜுன். இவர் ஆஞ்சநேயர் மீது மிகுந்த ஈடு பாடு உடையவர். அடுத்து நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி சார். இவர் ராகவேந்திரர் பக்தர்.


கீழே வரம் மந்திரத்தை மெல்ல படியுங்கள். அந்த அர்த்தம் ஏதேனும் புரிகிறாதா என்று பாருங்கள்.

ஓம் ஸஹனா வவது ஸஹநெள புனக்நு

ஸஹவீர்யம் கரவாவஹை

தேஜஸ்வினா வதீதவஸ்துமா

வித்விஷாவஹை

ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி...


இது தான் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி தினமும் பூஜையறையில் தவறாமல் உச்சரிக்கும் மந்திரம்.

இதன் அர்த்தம் என்னானா...
பிரம்மம் நம்மை பாதுகாக்கட்டும். பிரம்மம் நம்மிடம் கருணை செலுத்தட்டும். நாம் இணைந்து செயல்படுவோம். நமக்கு ஞானம் பிறக்கட்டும். நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவோம்.
நீங்களும் இந்த மந்திரத்தை செல்லி பிராத்தனை செய்யுங்கள். அந்த பரம்பொருளின் அருள் பூரணமா கிடைக்கட்டும். நாமும் இந்த மத்திரத்தை நம்பிகையுடன் சொல்லி வழிபட்டு ரஜினி சாருக்கு போட்டியா நாமும் வாழ்கையில் வளம்பெறுவோம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

ரஜினியுடன் இணையும் நாகராஜன்

ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல், உடை, நடை... எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ரஜினி படத்தில் தவறாமல் இடம் பெறும் காட்சி - பாம்பு. பாம்புக்கும் ரஜினிக்கும் பல தொடர்பு உண்டு... சினிமாவுல!. அதில் சில ...


1. அவர் முழுக்கதாநாயகனாக நடித்த முதல் படம் "பைரவி". அந்த படத்துல படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போது ஒருவித ஈர்ப்பு அனைத்து ரசிகனுக்கும் வரத்தான் செய்யும். என்னா ஸ்டைலு ... என்னா ஸ்டைலு ... அட அட ரஜினி என்றுமே சூப்பர் ஸ்டார் தான்.
'நண்டூறுது, நரியுருது' என்ற பாடல். தங்கையை இழந்து தவிக்கும் ஒரு அண்ணனின் சோக கானமான இது கேட்போர் நெஞ்சை இப்பொழுது கூட உருக்கிவிடும். அந்தளவிற்கு ஒரு அருமையான பாடல். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார்.

"டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று ரஜினி அவர்கள் அந்த படத்தின் இயக்குனரிடம் சொன்னதை எப்போதோ படித்தது நினைவுக்கு வருது. GREAT!

2. அன்று ஏற்படுத்திக்கொண்ட பாம்பு நட்பு அதன் பிறகு "தம்பிக்கு எந்த ஊரு". இந்த படத்துல நம்ப தலைவரு ஒரு "கில்மா" புக்கை கட்டிலில் அமர்ந்த படி படிக்கும் போது ஒரு நல்லபாம்பு இவர் அருகே வந்து படமெடுத்தபடி வரும் நகைச்சுவைக் காட்சியை எவராலும் மறக்க முடியாது.
'தம்பிக்கு எந்த ஊரு' படம் நினைவில் வரும்போதெல்லாம் எனக்கு கூடவே இலவச இணைப்பாக நினைவுக்கு வருவது கீழ்வரும் பாடலும் தான்.

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க...

3. தலைவரின் பாம்பு சென்டிமெண்ட் செமத்தியாக ஓர்க் அவுட் படங்களின் அண்ணாமலையும் ஒன்று.
சின்னஞ்சிறுசுகள் விழுந்து விழுந்து சிரித்த இடம் அது.

பாம்பு காமெடி சிறுசுகளுக்குன்னா... கடவுளே கடவுளே காமெடி இளசுகளுக்கு. அந்த அளவு தலைவரின் நகைசுவை மிளிரும் காட்சி பாம்புடன் இணைந்து சும்மபின்னியிருப்பார்.


4. படையப்பா படத்துல இவர் தோன்றும் காட்சியே மிக அற்புதமா அமைந்திருக்கும். பாம்பு புத்துல கையை விட்டு நல்லப்பாம்புவை எடுத்து ஒரு சின்ன முத்தம் கொடுத்து விட்டுவிடுவார். அந்த காட்சியில், தலைவரின் முகம் காட்டும்போது தியேடரில் விசில் பறக்கும் பாருங்க... அட அட .... தலைவரு தலைவரு தான். கூடவே நம்ப A.R.ரகுமான் சார் இசையில் சும்மா பின்னியிருப்பார்.
இந்த படம் நினைவில் வரும்போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது இரண்டு நினைவுகள். ஓன்று சிவாஜி + சௌந்தர்யா இருவரும் சினிமா உலகைவிட்டு மறைந்தது. மற்றொண்டு, நீலாம்பரி கதா பாத்திரம்.

5. சந்திரமுகியில் வழக்கமா ரஜினி படங்களில் வரும் பாம்பு காட்சிகள் இதில் இல்லை. ஆனால், பாம்புகளுடன் இவர் நடித்திருப்பார். பாம்பும், சந்திரமுகியின் படமும், வேட்டைய ராஜாவின் படமும் காண்பிக்கும் பொழுது, 'அமானுஷ்ய' உணர்வு நம்முள் ஏற்படும்.
இந்த படம் நினைவில் வரும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது ரஜினி + வடிவேலு காமெடி நம் வயிறை பதம் பார்த்ததுதான். அதுவும் வடிவேலு சொல்லும் வசனம் வெகு பிரபலம். "மாப்பு ... மாப்பு.... வட்சுடாண்டா பெரியா ஆப்பா.." ன்னு சொல்லிகேட்டே அந்த பெரிய பங்களாவில் இருந்து வெளியே வருவார். மறக்க முடியாத ஓன்று.

"என்ன கொடும சரவணன் இது... "-ன்னு நம்ப இளைய திலகம் பிரபு தலையில அடிச்சிகிற காட்சி + ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு.

அடுத்த படமான ரோபோவில் இதேபோல ஏதாவது பாம்பு காட்சியை எதிர்பாக்கலாமா...!? இதனை படிக்கும் போது உங்களுக்கு தோன்றும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளலாமே...!

இவ்வளவு நேரம் படித்த நீங்கள் எனக்காக ஒரு ஓட்டு போடுங்களேன்... நன்றி மீண்டும் வருக.

ரஜினி - நடிக்க முடியாமல் போன படம்

ராகவேந்திரர் வாழ்க்கையில் சுல்த்தான்பாய் என்கிற பாத்திரம் வித்தியாசமானது. ராகவேந்திரரை ஏமாற்றுவதற்காக அவர் ஒருமுறை மாமிச துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டார். ராகவேந்திரர் அதனை தனது அசைக்கமுடியாத பக்தியால் புஷ்பமாக மாற்றி விடுவார்.


ராகவேந்திரரிடம் அப்போதே அவர் சிஷ்சியனாகிவிடுவார். கடைசியில் தான் மகா சமாதியாகும் இடத்தையும் சுல்தானே அமைத்துத் தரும்படி ராகவேந்திரர் கேட்டார். அதை அமைத்து முடித்து, சுவாமிகள் சமாதி ஆவதற்கு முன்பு சுல்தான், ராகவேந்திரர் காலில் விழுந்து கதறி அழுது,
"ஐயா, நீங்கள் போனபின்பு இது இந்துக்களின் புனித தளமாகிவிடுமே இஸ்லாமியரான என்னை அனுமதிக்காவிட்டால் நான் எப்படி இங்கே வந்து உங்களைத் தரிசிப்பேன்?"
என்று உருகி கேட்டார். உடனே ராகவேந்திரர்,
"என் சமாதிக்கு மேல் ஒரு மாடம் அமைத்துவிடு. நீ எங்கிருந்து எப்போது பார்த்தாலும் நான் உனக்கு காட்சி தருவேன்"
என்று சொல்லி மறைந்து விடுவார்.


இந்த நிகல்வைகொண்டு, ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தோணியது. விறுவிறுவென படமாக்கும் முயற்சிகள் ஆரமிக்கப்பட்டன.

அதில் ராகவேந்திரராக அவர் மனதில் வைத்திருந்தது சிவாஜி சாரை தான். சுல்த்தான் பாய் வேடத்தில் ரஜினி சார் நடிப்பதாக முடிவெடுத்துவிட்டார். இதனை அறிவிப்பாக வெளியிட இருந்த நேரத்தில், ரஜினியின் நண்பர் அதனை சில நாட்கள் கலைத்து வெளியிடலாம் என்றார்.

ஆனால், அது கடைசி வரை வெளியிடப்படவில்லை. சில நாட்களுக்கு பிறகு, புதிய காட்சிகளுடன் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தயாரிக்கப் பட்ட கதையில் ரஜினியே ராகவேந்திரர் வேடத்தில் நடித்தார் - என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை நம்முடன் பகிர்ந்துகொண்டவர் ரஜினியை வைத்து ஹீரோவாக பைரவி படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் திரு.கலைஞானம் அவர்கள்.


டிஸ்கி:
இந்த சுத்தானை மனதில் கொண்டு தான் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கிய அனிமேசன் படத்திற்கு "சுல்த்தான் தி வாரியார்" என்று பெயர் வைத்தாரோ?

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

ரஜினியை தேடிய லண்டன் போலீஸ்

விடுதலை படத்துக்காக சிவாஜிசார், ரஜினி, நான், விஷ்ணுவர்த்தன் எல்லோரும் லண்டன் போயிருந்தோம். சிவாஜிசாரை மட்டும் வேறொரு ஹோடலில் தங்க வச்சுட்டு, நாங்க மூணு பேரும் இன்னொரு ஹோட்டல தங்கியிருந்தோம். இருபது நாள் தொடர்ந்து லண்டன்ல ஷூட்டிங் நடந்துச்சு.

ஒவ்வொரு நாள் ராத்திரியும் நாங்க மூணுபேரும் ஹோடேலேயே இருக்கமாட்டோம். லண்டன்னோட இண்டு இடுக்கு சுத்தி பார்க்கிறது தான் எங்க வேலை ... இப்படியே இருபது நாளும் கழிந்தது.

கடைசியா ஷூட்டிங் முடிந்து ஊருக்கு கிளம்பு ஏர்போர்ட்டுக்கு வந்தோம். அப்பப் படத்தோட தயாரிப்பாளர் பாலாஜி சார் படபடப்போடு வந்து, "ஏம்பா ரஜினி... உன்னையும் விஜயகுமாரையும் விஷ்ணுவர்த்தனையும், லண்டன் போலீஸ் தேடுறதா பேப்பர்ல வந்திருக்கே... என்னப்பா தப்பு செய்தீங்க..?"னு கேட்டாரு. அதோடு பேப்பரையும் விரிச்சி காண்பித்தாறு.

முதல் பக்கத்துல, நாங்க மூணு பேரும் இருக்கிற மாதிரி, பெரிய போட்டோவும் போட்டு "இவர்களை லண்டன் போலீஸ் தேடி வருகிறார்கள்..." என்ற செய்தி வெளியிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததுமே ரஜினி திக்பிரமை பிடிச்ச மாதிரி ஆயிட்டாரு. எங்களுக்கும் அதே பிரமை தான்.

எங்களோட அதிர்ச்சியைப் பார்த்து கொஞ்ச நேரம் ரசித்த பாலாஜி சார், திடீர்ன்னு கட கடன்னு சிரிக்க ஆரம்மிசிடாறு. எங்க கையை பிடிச்சு ஏற்போர்டுல இருக்கிற பேப்பர் கடைக்கு அழைச்சிட்டு போனாரு. அங்கே உள்ள பேப்பர்ல
முதல் பக்கம் மட்டும் 'ப்ளாங்கா' இருக்க... மத்த பக்கத்துல நியூஸ் இருக்குமாம். பப்ளிக் யாரவது தங்களை பத்தி நியூஸ் வரணும்னு ஆசை பட்டு பணம் கொடுத்தா போதும் ... உடனே முதல் பக்கத்துல அவங்களை பற்றி நியூஸ் போட்டு, உடனே ப்ரிண்டும் பண்ணி தருவார்களாம்.

லண்டன்ல இருக்கிறவங்க தங்களை கிண்டல் பண்ணுவதற்காக ராணி எலிசபத் ராணியை சந்தித்த மாதிரி எல்லோரும் விளையாட்டா, படத்தோட நியூஸ் போட்டுக்குவாங்காலாம்.
அப்படிதான், எங்க போட்டோவை அந்த பேப்பர் கடையில கொடுத்து, பிரிண்ட் பண்ண வட்சிருக்கரு பாலாஜி சாரு.... அந்த திகில் காமெடியா இப்ப நினைத்தாலும் சிரிப்பாதான் இருக்கும்.." என்று நம்ப நாட்டாமை விஜயகுமார் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி சொன்ன ஒரு தகவல் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

சூப்பர் ஸ்டார் தி கிரேட்!

எஸ்.பி.முத்துராமன் அவர்கள், கனிமுத்துப்பாப்பா படத்தில் டைரக்டர் ஆனார். பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான ரஜினி என்கிற நடிகனை முழுமையாக பயன்படுத்தி வியாபார ரீதியில் ரஜினி படங்களை வெற்றியடையவைத்த இயக்குனர் என்றால் இவர்தான்.அவர் ரஜினி பற்றி சொன்ன ஒரு தகவல் உங்களுடன் ...

அந்த காலத்துல சிகரட்டை தூக்கிப் போட்டு வாயில் புடிகிறது, தலைமுடியை கலைசிக்கிட்டு ஸ்டைல் காட்டறதுன்னு ரஜினி வில்லனவே பெர்பார்ம் பண்ணிக்கிட்டு இருந்தப்ப சிவகுமார் சார் தான் பெரிய ஹீரோ. அவர் நடிச்ச படமெல்லாம் அமோகமா போயிகிட்டிருந்தது. அப்போதான் எனக்கு ஒரு வினோதமான யோசனை வந்தது.

ஹீரோவா நடிக்கிற சிவகுமாரை வில்லனாவும் வில்லனா நடிச்சிக்கிட்டு இருக்கிற ரஜினியை ஹீரோவாவும் போட்ட எப்படி இருக்குனு -கிறது தான் அந்த யோசனை.

இது ஒரு அக்னி பரிட்சைதான் என்று தெரிந்தாலும் மனசுல அந்த எண்ணம் ஆணியடிச்ச மாதிரி நிலைத்து போச்சு. இந்த ஐடியாவுக்கு தோதா எழுத்தாளர் மகரிஷி எழுதிய புவனா ஒரு கேள்விக்குறி என்ற நாவல் நம்பிக்கை கொடுக்கவும், அதே தலைப்பில் அந்தக் கதையைப் படமா எடுத்தோம்.

இதே படத்துல ஒரு குருப் டான்ஸ்... இதை ஷூட் பண்ண சித்தூர் பக்கத்துல ஒரு குக்கிராமத்துக்கு போயிருந்தோம். ரஜினி நடிக்கிற சீனை எடுக்கிறப்பத்தான் பாட்டை ப்ளே-பேக் செய்ய மெசின் ரிப்பேராகின விஷயம் தெரிஞ்சது. அதை சரி பண்ணனுனா மறுபடி மெட்ராஸ் தான் போகணும். அதனால் ரஜினிகிடே 'மெட்ராஸ் போயி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த நாள் வாங்கனு சொன்னேன்.

"அதுவரைக்கும் இங்கே நீங்க என்ன செய்ய போறீங்க?"- னு திருப்பி கேட்டார். "நாங்க இங்கேயே எதையாவது சாப்பிட்டுகிட்டு எங்காவாவது படுத்துகிறோம்னு" சொன்னேன். ஆனா, ரஜினி அதுக்கு சம்மதிக்கவில்லை. எங்களோடவே அந்த கிராமத்துல தங்கினதோட, அங்கே இருந்த பெட்டி கடையில் பட்ஜியும் பிஸ்கட்டும் வாங்கிக் சாப்பிட்டுட்டு ஒரு குடிசையிலேயே படுத்துத் தூங்கிட்டாரு.

மறுநாள் எந்த பந்தாவும் பண்ணாம கிராமத்து இருந்த குளத்துல குளிச்சிட்டு ஸ்பாட்டுக்கு வந்துட்டாரு. இதை இப்போ நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு என்று ரஜினி பற்றி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் சொன்னது.

ரஜினின்னா ஸ்பீடா ஸ்டைலா மட்டுமில்ல சூப்பரா நடிக்கவும் முடியும்னு நிருபிச்ச படம் "புவனா ஒரு கேள்விக்குறி". ஆரம்பத்துல, "என்ன சார் டயலாக் எல்லாம் ரொம்ப பெருசா இருக்குனு" ரஜினி பயந்தாரு.... ஆனா, நான் கொடுத்த என்கரேஜ்மென்ட்டுல சும்மா பிச்சி எடுத்துடாரு.

"ராஜா என்பார் மந்திரி என்பார்..." பாட்டுல ரஜினி காமித்த ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பெர்பார்மன்ஸ் அவருக்குள்ளே இருக்கிற அற்புதமான நடிகனை வெளிக்கொண்டு வந்ததைப் பார்த்துட்டு நான் மட்டுமல்ல ... தமிழ் திரையுலகமே அசந்து போச்சு!

ஆரம்பம் முதலே தனக்கென ஒரு கொள்கையுடன் + லட்சியத்துடன் வாழ்ந்த நல்ல மனிதர் நம்ப சூப்பர் ஸ்டார் இன்றைய தலைமுறைக்கு ஒரு எடுத்துகாட்டு. இப்படியும் சில நல்ல உள்ளங்கள்!

சூப்பர் ஸ்டார் தி கிரேட்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!