Video

கோ‌வா‌ - திரைபட விமர்சனம்

செ‌ன்‌னை‌ 28, சரோ‌ஜா‌ ஆகி‌ய படங்‌களை‌ இயக்‌கி‌ய வெ‌ங்‌கட்‌பி‌ரபு‌, இப்‌போ‌து இயக்‌கி‌ சௌந்தர்யா ர‌ஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயா‌ரிப்பு படம்‌ கோ‌வா‌.


படத்தோட கதை என்னனா ...

பண்ணைப்புரத்தில் உதவாக்கரைகளாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று இளைஞர்கள் (ஜெய், பிரேம்ஜி, வைபவ்) ஊரை விட்டு ஜாலியாக ஒரு வாரத்தினை கழிக்க மதுரைக்கு வந்த இடத்தில் அவர்களது நண்பனுக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணுக்கும் திருமணம் - எப்படி சாத்தியம் என்று கேட்க?, தான் கோவாவில் 'டூரிஸ்ட் கைடாக' இருக்கும் போது அந்த வெள்ளைக்கார பெண்ணுக்கும் தனக்கும் காதல் - கல்யாணம் - முதல் இரவு 5 ஸ்டார் ஓட்டலில் நடக்க போகின்றது - மனைவியுடன் வெளிநாடு செல்லபோவதாகவும்" சொல்ல - நண்பர்கள் மூவரும் அதிர்ச்சி.

சாதாரணமான அவனுக்கே ஒரு 'பாரின்' பொண்ணு கிடைக்கும் போது... நமக்கு கிடைக்காத? என்ற நம்பிக்கையில் - கோவா செல்ல முடிவெடுகிறார்கள். அதன் பின்னர் நடக்கும் கூத்தும் கும்மாளமும் தான் மீதி படத்தின் கதை (?).

முதல்‌ பா‌தி வரை கதையே இல்லை.‌ கா‌மெ‌டி‌யு‌ம்‌ கலகலப்‌பு‌மா‌க செ‌ல்‌லும்‌ படம்‌ இரண்‌டா‌வது பா‌தி‌யி‌ல்‌ என்‌ன சொ‌ல்‌ல வருகி‌றா‌ர்‌கள்‌ என்‌று தெ‌ரி‌வதற்‌குள்‌ படம் முடிந்துவிடுகிறது.



படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

கோ‌வாவி‌ன்‌ அழகை‌‌ அழகா‌க படம்‌ பி‌டி‌த்‌துள்‌ளது சக்‌தி‌ சரவணன்‌ ஒள்‌ப்‌பதி‌வு‌. "ஏலே‌லோ‌.. பண்‌ணை‌பு‌ரம்‌... " என வரும்‌ டை‌ட்‌டி‌ல்‌ பா‌டலி‌ல்‌ மனதி‌ல்‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌ யு‌வன்‌சங்‌கர்‌ரா‌ஜா‌.

பல படங்‌களி‌ல்‌ வி‌ல்‌லனா‌க வந்‌து மி‌ரட்‌டும்‌ சம்‌பத் இதுவரை பார்த்திராத 'கெட்அப்'. ஒரு 'ஹோமோ' -வாக வந்து நம்மை நடி‌த்‌து சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. கேரக்டர் படத்தில் அழுத்தமாக பதிந்துள்ளது.

சம்‌பத்‌ - பி‌ரே‌ம்‌ஜி‌ உறவை‌ பா‌ர்‌த்‌து அரவி‌ந்‌த்‌ பொ‌றா‌மை‌படுவதும்‌ கோ‌பப்‌படுவதும்‌ பழிவாங்க முயல்‌வதும்‌ நல்‌ல கா‌மெ‌டி‌. 'சிக்ஸ்பக்' உடலமைப்பு அருமை.

படம்‌ முழுக்‌க பி‌ரே‌ம்‌ஜி‌ நகை‌ச்‌சுவை‌ தோ‌ரணம்‌ கட்‌டுகி‌றா‌ர்‌. வெ‌ள்‌ளை‌க்‌கா‌ர பெ‌ண்‌ணி‌டம்‌ கா‌தலி‌ல்‌ உருகும்‌ போ‌தும்‌, சம்‌பத்‌துடன்‌ சே‌ர்‌ந்‌து கூத்‌தடி‌க்‌கும்‌ போ‌தும்‌ 'நா‌ன்‌ ஸ்‌டா‌ப்'‌ கொ‌ண்‌டா‌ட்‌டம்‌.

பி‌ரே‌ம்‌ஜி‌யை‌ கா‌தலி‌க்‌கும்‌ வெ‌ள்‌ளை‌க்‌கா‌ர பெ‌ண்‌ அழகோ அழகு!- தன்‌ பா‌த்‌தி‌ரத்‌தை‌ நன்‌றா‌க செய்திருக்கிறாள்.

முதல் கணவன் பிரசன்னாவை கழட்டிவிட்டிட்டு ஜாலி + சா‌டி‌ஸ்‌டா‌க வரும்‌ சி‌னே‌கா கலக்‌கல்‌ உடை‌யி‌ல்‌ வந்‌து கவர்‌ச்‌சி‌ வி‌ருந்‌து படை‌க்‌கி‌றா‌ர்‌.

ஜெ‌ய்‌ நகை‌ச்‌சுவை‌யி‌ல்‌ கலக்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவர்‌ ஆங்‌கி‌லம்‌ பே‌சும்‌ பெ‌ருமை‌ பீ‌த்‌துவதும்‌ ரசி‌க்‌க முடி‌கி‌றது. அவர்‌ பி‌யா‌வு‌டன்‌ கா‌தல்‌ கொ‌ண்‌டு வே‌தனை‌ப்‌படும்‌ கா‌ட்‌சி‌யி‌லும்‌ அசத்‌தி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌.

பா‌ர்‌வை‌யா‌ல்‌ சொ‌க்‌க வை‌க்‌கும்‌ பியா இந்தப் படத்தில் நடிக்கும் வேலை இல்லை.

வை‌பவ்‌ லொ‌ல்‌லு தா‌ங்‌க முடி‌யவி‌ல்‌லை‌. அவர்‌ பெ‌ண்‌கள்‌ தன்‌ வலை‌யி‌ல்‌ வி‌ழுகி‌றா‌ர்‌கள்‌ என்‌று உதா‌ர்‌வி‌ட்‌டு நம்‌ப வை‌க்‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌, 'தி‌ரனன்‌னா‌ தி‌ரனன்‌னா‌ ..' என்‌ற பழைய பட பி‌ன்‌னணி‌ இசை‌யோ‌டு கா‌ட்‌டும்‌ போ‌து தி‌யே‌ட்‌டரி‌ல்‌ செ‌ம கை‌தட்‌டல்‌. அவர்‌ சி‌னே‌கா‌வி‌டம்‌ மா‌ட்‌டி‌க்‌கா‌ண்‌டு அடி‌வா‌ங்‌கும்‌ பி‌ளா‌ஷ்‌பே‌க்‌ கா‌ட்‌சி‌கள்‌ நகை‌ச்‌சுவை‌ கலா‌ட்‌டா‌.


ஆரம்‌பத்‌தி‌ல்‌ ஆனந்‌தரா‌ஜ்‌ நக்கலில் பின்னி எடுத்திருக்கிறார். சண்‌முகசுந்‌தரம்‌, வி‌ஜயகுமா‌ர்‌, சந்‌தி‌ரசே‌கர்‌ மூ‌வரும்‌ அவர்‌கள்‌ மகன்‌களை‌ பற்‌றி‌ நி‌னை‌க்‌கும்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌ன்‌றனர்‌. அதுவும் சண்‌முகசுந்‌தரம்‌ நடிப்பு இன்னும் ஒருபடி மேல் சென்று நையாண்டி செய்திருக்கிறார்.

பல அவதார கதாப்பாத்திரம் ஒன்று இருக்கிறது. ஏதாவது ஒரு 'கெடுப்பில்' (வாத்தியார், போலீஸ், பஞ்சாயத்து ஆட்களில் ஒருவர், பைலட்) எந்த காட்சியை பார்த்தாலும் அவர் வருகிறார். யார் அவரு? சும்மா 'பல்கா' இருகாரு.

'ஏழேழு தலைமுறைக்கும்' + 'இது வரை இல்லாத உணர்விது ' பாடல் அருமை. மற்றவைகள் மனதை தொடும்படி இல்லை. யுவன் சங்கர் ராஜா கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்.

கோவா - காமெடி டூர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

7 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

அவரு நடிகை அம்பிகாவோட முன்னாள் கணவர்.. நிறைய டிவி சீரியல் படங்களில் நடித்திருக்கிறார்.

ஷங்கர் அண்ணா நீங்களா ?!!!... என்னால நம்பவே முடியல.. முதல் முறையா என் வலை தளத்தில் உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு என் சிரம் தாழ்த்த நன்றிகள் அண்ணா.

நடிகை அம்பிகாவின் கணவரா ?!- நல்ல நடிப்பு.

//சாதாரணமான அவனுக்கே ஒரு 'பாரின்' பொண்ணு கிடைக்கும் போது... நமக்கு கிடைக்காத? என்ற நம்பிக்கையில் -//

நாங்க கூட கல்லூரி நாட்களில் இப்படிச் சுற்றியது உண்டு..,

Thanks Suresh. Enna FLASHBACK ...kaa!? nJoy.

Maaple konjam konjam puriyala da. Correcta type pannu da.

வணக்கம். தங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது. தமிழ்ப்பார்வை தளத்தில் மீள்பதிவு செய்துள்ளோம்
www.tamillook.com

Post a Comment