Video

யோகா - பத்மாசனம்

பெரும்பான்மையோருக்கு அலுவலகங்களில் நாற்காலி மேஜையில் அமர்ந்து செய்யும் வேலையின் காரணமாக கால் முட்டிகளை மடக்கி அமர வாய்ப்பே இல்லை. கால்களுக்கு வலிமை தர கூடிய ஒரு ஆசனம் நமக்கு தேவைபடுகிறது. அதற்காகவே இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது பத்மாசனம் பற்றி தான்.


2. பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை என்று பொருள். ஆசனம் என்றால் இருக்கை என்று அர்த்தம் அதாவது ஒருநிலையில் அசையாமல் இருப்பது. ஆசனத்தை சுகமான இருக்கை என்கிறார் பதஞ்சலி முனிவர்.

இந்த பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.

செய்முறை விளக்கம் :-

தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும்.

வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து இடது காலின் தொடை மீது - குதிகால் தொப்புளை தொடுமளவிற்கு வைக்கவும்.

இதேபோல, இடது காலையும் மடக்கி, இரண்டு கைகளாலும் பிடித்து வலது காலின் தொடையின் மீது - குதிகால் தொப்புளை தொடுமளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.

இரண்டு முழங்கால்களும் தரையில் படுமாறும், கால் பாதங்கள் மேற்புறமாக இருக்கும் வண்ணம் அமர வேண்டும். அப்பொழுது முதுகுத் தண்டு நேராக இருத்தல் வேண்டும்.

இவ்வாறு அமர்வது சிரம்மாக இருந்தால், சிறிது நேரத்திற்குப் பின்பு, கால்களை மாற்றி மீண்டும் அதே நிலையில் அமரலாம்.

முதுகுத் தண்டு நேராகவும், கைகள் இரண்டும் வணங்கிடும் நிலையிலோ அல்லது முழங்கால்களின் மீது ஒன்றன் மீது ஒன்றாக - உள்ளங்கை மேற்புறமாக இருக்கும் வண்ணம், இரண்டு கைகளும் கால்களின் மீது அமையும் வண்ணமும், காலின் மீது கைகளை வைத்து கட்டை விரலோடு ஆட்காட்டி விரலை தொட்டுக் கொண்டும், மற்ற விரல்களை மேல் நோக்கிய வண்ணமுமாக அமரலாம்.

எச்சரிக்கை :-

சிலர் இந்த ஆசனத்தை செய்யும் போது குனிவார்கள். இது தவறு.

செயல்முறை கண்ணொளி இங்கே (Watch this video) :-



பயன்கள் :-
  • மூளையை அமைதிப்படுத்தும்

  • நன்றாக பசி எடுக்கும்.

  • உடல் முழுவதும் தளர்ந்த நிலைக்கு வரும்

  • முழங்கால்களையும், முட்டிகளையும் நன்கு விரிக்கும்

  • அடி வயிறு, முதுகுத் தண்டு, சிறுநீரகப் பை ஆகியவற்றிற்கு புத்துணர்வு கொடுக்கும்.

  • இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சிக்கு இவ்வாசனமே மிக மிக உயர்ந்த தாக யோகிகள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் இதன் அருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

கொசுறு செய்தி :-
நம்ப ஷிரேயா அக்கா கூட யோகா செய்யறாங்க. ஆனா சரியா செய்யறாங்களா இல்லையானு நீங்களே சொல்லுங்க. மற்றபடி இந்த படத்துக்கும் யோகாவுக்கும் இருக்கும் 'லிங்கை' நீங்களே பின்னூட்டத்தில் தெளிவா சொல்லுங்க.
இப்படியெல்லாம் யோகா செய்ய வந்தா ... யோகாவையா கத்துக்க முடியும் ...?! அதையும் மீறி அக்காவுக்கு பின்னாடி இருக்கும் அந்த அங்கிள் என்ன செய்யறாரு ?

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!

நன்றி : யோகாலயம்

4 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

ஷ்ரேயாவைப் படம் வரைகிறாரோ...

நன்றி ஸ்ரீராம். படம் வரைய பின்னாடியா உட்காருவாங்க ..?

ராம்... நீங்கள் கொஞ்சம் குசுப்பு பிடித்தவர்போல தான் இருக்கிறீர்கள் நண்பரே!

Post a Comment