Video

யோகா - கேள்வியும் பதிலும்

யோகா பற்றி பலருக்கும் சில பல சந்தேகங்கள் வருவது இயல்பு. உங்களுக்கும் தோன்றின கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே அணிவகுத்து வருகின்றன. மறக்காமல் கொசுறு செய்தியை வாசித்து செல்லுங்கள்.

1) எந்த வயது முதல் யோகா பழகலாம் ?

ஐந்து வயது முதல் எண்பது வயது வரை யோகா பழகலாம். எந்த வயதிலும் பழக ஆரம்பிக்கலாம். அவரவர் வயதிற்கேற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

2) உடற்பயிற்சி தேவையா?

உடற்பயிற்சி தேவைதான். மனிதனுக்கு உணவும் உறக்கமும் தினமும் தேவை. அதுபோல், ஆரோக்கியமாய் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

3) உடற்பயிற்சிகளைவிட யோகா எந்தவிதத்தில் நல்லது?

யோகாவிற்கு நோய்களைக் கட்டுபடுத்தும், தீர்க்கும் சிறப்பு உண்டு. பிற உடற்பயிற்சிகளைத் செய்யப் பலவித உபகரணங்கள் தேவையாக உள்ளன. ஆனால், யோகா செய்வதற்கு, ஒரே ஒரு தரைவிரிப்பு இருந்தால் போதும்; வேறு எதுவும் தேவையில்லை. அதனால் யோகாவை எந்த இடத்திலும் செய்ய முடியும்.

4) யோகா மூலம் எந்தவித வியாதிகளைக் குணப்படுத்த முடியும்?

யோகாவினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும். முறைப்படி செய்யப்படும் யோகாவினால் டாக்டர்கள் கைவிட்ட ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம், யானைக்கால் வியாதி போன்ற பலவித வியாதிகளையும் நமது யோகா ஆசிரியர்கள் குணப்படுத்துவது உலகம் அறிந்த செய்தியாகும்.

5) நீரிழிவு உள்ளவர்கள் எந்தவிதமான பயிற்சியைச் செய்யலாம் ?

தனுராஸனம், யோகமுத்திரை, மத்யேந்த்ராஸனம், சப்த வஜ்ராஸனம், திரிகோணாசனம் செய்துவந்தால் நாளடைவில் வியாதி குணமாகும்.

6) யோகா பயிற்சி செய்யும்போது உணவுக் கட்டுப்பாடு அவசியமா?

உணவில் கட்டுப்பாடு இல்லையென்றால் நோய்கள் அதிகமாகும். உணவு, உயிர் வாழ்வதற்குத்தானே தவிர, உடலைப் பெருக்குவதற்கும், கெடுத்துக் கொள்வதற்கும் அல்ல. இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம், காபி, டீ, குடிப்பழக்கம், சிகரெட் பிடித்தல் முதலியவற்றை முதலில் குறைத்துப் பிறகு அறவே நிறுத்திவிடல் வேண்டும். உணவில் கீரைகள், காய் வகைகள், பழங்கள், பால் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நம்முள் பலர் இப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் உடலைப் பெருக்கவிட்டுவிட்டுப் பிறகு செயல்பட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

7) யோகா செய்வதற்கு ஏற்ற உடை எது?

இறுக்கமான உடைகள் யோகாவிற்கு ஏற்றன அல்ல. யோகாவிற்குப் பெண்கள் சுடிதார், பைஜாமா போன்ற தளர்வான உடைகள் அணிவது நல்லது. காற்று உடலில் படுமாறு அணிய வேண்டும். ஆண்களானால் ‘ஷார்ட்ஸ்’ அணியலாம்.

8)பிரசவ காலத்திற்கு முன்பாக எந்த மாதம்வரை யோகாசனம் செய்யலாம்?

பிரசவம் ஆவதற்கு முன்பாக மூன்று மாதங்கள் இருக்கும்போது யோகாசனத்தை நிறுத்திவிட வேண்டும். பிரசவம் ஆன பிறகு மூன்று மாதம் கழித்து யோகாசனம் செய்யலாம். நேரிடையாகப் பயிற்சி பெறுவது நல்லது.

9) எந்த நேரம் வேண்டுமானலும் யோகா செய்யலாமா?

அதிகாலையில் வெறும் வயிற்றுடன் செய்வது நல்லது. மாலையிலும் செய்யலாம். நடுப்பகல் நேரத்தில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

10) யோகாவைத் தொடர முடியாமல் நடுவில் நிறுத்திவிட்டால் உடல் எடை கூடிவிடுமா?

இதற்கு வாய்ப்பு இருக்கிறது. கூடிய வரை நடுவில் நிறுத்தாமல் இருக்க வேண்டும். அதிக நேரம் செய்ய முடியாவிட்டாலும் பதினைந்து அல்லது இருபது நிமிடமாவது செய்வது நல்லது.

11) புத்தகங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றைப் பார்த்து யோகா செய்யலாமா?

முதன் முதலில் நீங்கள் ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுவிட்டுப் பிறகு படித்தோ, பார்த்தோ பழகலாம். பழகும்போது மனநிலை ஆசனத்திலேயே இருக்க வேண்டும்.

12) மிகப் பருமனாய் இருப்பவர்கள் உடலை வளைத்துச் செய்ய முடியுமா?

மிகப் பருமனாய் இருப்பவர்களுக்கு எனச் சில குறிப்பிட்ட ஆசனங்கள் இருக்கின்றன. அவர்கள் அவற்றைத் தொடர்ந்து பழகினால் உடல் எடை குறைந்து எளிதாகச் செய்ய முடியும்.

கொசுறு செய்தி :-

நம்ப இலியானா சும்மா வளைந்து நெளிந்து யோகா பண்றத பார்க்கும் போது நானும் யோகா கத்துக்க ஆரமிச்சேன். தொடர்ந்து பல நாட்கள். எனக்கே ஆச்சரியம்..! எப்படி என்னால் இதெல்லாம் முடியுதுன்னு.!!!


இலியானா, இன்றும் என்னை செல்லமாக அடித்தாள். ரசித்தேன். ஒழுங்கா யோகாவை கத்துக்க சொன்னாள். ஏனோ அவள் அடித்த அடி இன்று எனக்கு ரொம்பவே வலித்தது. யோகா கத்துகிறவள் அடித்தாள் இப்படியும் வலிக்குமோனு நினைத்தேன்.

ஏதோ கராத்தே கத்துகிடவள் போல மீண்டும் ஒரு அடி விழுந்தது. என்மீது கோபம் ஏனோ ? என்று கேட்ட நினைத்து திருப்பிய போது விழுந்தேன், படுக்கையில் இருந்து... அருகில் வீடு கூட்டும் 'துடப்பை கட்டை'யுடன் நம்பன் என்னை முறைத்த படி நின்ருந்தான். விழுந்த அடிகள் எல்லாம் இலியானா தந்தது என்று இருந்தேன். But...!?

சிலருக்கு கனவுல தான் யோகா பண்ற மாதிரி இருக்கும் போல. சரிங்க நீங்களும் என்னை மாதிரி கனவுல யோகா செய்யாம நிஜத்துல யோகா பண்ணுங்க. வாழ்க்கைய செழுமையா வச்சுகுங்க.

நன்றி: திரு.இராமநாதன்

4 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

இந்தப் பதிவு நல்ல வாசிப்பை அளிக்கக் கூடும்.

உங்கள் வருகைக்கு நன்றி அறிவன்

நீங்கள் கொடுத்துள்ள முகவரி தளத்தில், தலைப்பை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. சரிசெய்யுங்கள்.

Please give the source link also.

Post a Comment