Video

முன்தினம் பார்த்தேனே - பாடல் விமர்சனம்

புதுமுக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய "முன்தினம் பார்த்தேனே" படத்துக்கு இசை தமன். ஈரம் படத்தின் மூலம் நம்மை மிரட்டியவரும் இவரே. இந்த படத்திற்கு பாடல்களை ரோகினி, விவேகா & பிரியன் என்ற மூன்று கவினர்கள் எழுதியுள்ளனர். இனி பாடலின் விமர்சம் தொடங்குகிறது ...

1. ரஞ்சித் ரசித்து உருகி பாடியிரும் பாடல் இது. உன்னாலே உன்னாலே பட பாடலை நினைவுபடுத்தியது. பிரியன் எழுதிய இந்த பாடல் சூப்பர் ஹிட். முதல் முறை கேட்டும்போதே மனதில் நிலைக்கிறது.
இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதாய் நீயும்
அடைமழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண் உன்கண்ணில் சிக்கி கொண்டேன்
தப்பிக்க தானே நான் மறந்தேன் ஏன் மறந்தேன்...

2. கிரிஷ் & சுசித்ரா இருவரும் இணைந்து பாடிய பாடல் இது. அமைதியா ஆரமித்து பட்டாசாய் இறுதியில் முடிகிறது பாடல். விவேகா எழுதிய பாடல் இது.
பேசும் பூவே பேசும் பூவே
காதல் பேசும் கன்னி தீவே ...

3. பிரியஷர்ஷினி பாடிய மெல்லிசை பாடல். பிரியன் எழுதிய பாடலில் ஒரே கவிதை மயம் தான். இதன் பாடலும் உன்னாலே உன்னாலே படப்பாடலை நினைவு படுத்துகிறது.
மனதின் அடியில் மலை தூறல் - ஓ
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி மழையில் நுழையும்
மெதுவாய் உயிர் கரையில் நிறையும்...

4. நரேஷ் ஐயர் & ஜனனி இணைந்த பாடியிருக்கும் ஜாலியான காதல் பாடல். ரோகினி எழுதிய பாடல் முழுவது பின்னணியில் பல இடங்களில் ஒலிக்கும் "_யா" என்ற வார்த்தை.... மிக அழகு.
மாயா தேவை தயா
மாயா இல்லை நீயா
உன்னினைவாலே சறுக்குது என்னை தகித்தாயே ....

5. ஹரிசரண் & சுசித்ரா இணைந்து பாடியிருக்கும் ஒரு காதல் மலரும் பாடல். ரோகினி எழுதிய பாடல்.
கனவென கனவென விரல் தொடும் கனவென
ரகசிய உறவென ஆனாயே
உன்னை கண்டேனடி மையல் கொண்டேனடி
வேண்டும் என்றேனடி
விழி ஓரங்கேலே பேசும் மௌனக்களே ....

6. தமன் & சுசித்ரா - காதல் பாடல் இது. தமனின் குரலை கேட்டும் போது ரகுமானின் சாயல் நிறைய தெரிகிறது. கலக்கலா இருக்கு பாடல். அந்த விசில் சப்தம் அருமை. பிரியன் எழுதிய இந்த தீம் மியூசிக் பாடல் ஆகவும் இதனை பயன் படுத்தியிருப்பார் போல தெரிகிறது.
சாரல் புது சாரல்
உன் நெஞ்சிலாமல்காதல் காதல் ...

எல்லா பாடல்களும் கேட்டும் படி அமைத்த தமன்னுக்கு என் நன்றிகள். பாடல் வரிகள் புரியும் படியும் வரிகளை அமுக்கிவிடாமல் இசை கோர்வை சேர்த்த இசை அமைப்பாளருக்கு மீண்டும் என்பாராட்டுக்கள்.

இந்த பட பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக: Megaupload அல்லது Rapidshare

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!

7 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

நன்றி இய‌ற்கை.

Thanks Seema. Thanks for your support to make this post successful.

Thanks Angel. Thanks for comments.

maskovin kaviri keetu paarungal athilum paadalgal arumai thamaninisai

இந்த படத்தில் பாடல்களை விடவும் அவைகள் மிக நன்றாக இருக்கும் கேட்பதற்கு. மேலும் வைரமுத்துவின் வைரவரிகள் கூடுதல் பலம். வருகைக்கு நன்றிகள் 'DHANS' நண்பரே.

Post a Comment