Video

சமையல் குறிப்பு : காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் என்றாலே நம் எல்றோரோட நினைவுக்கும் வருவது "பட்டு சேலை" தான்.

அதை தவிர, நிறைய புராதான கோவில்களும் நிறைந்த இடம். அந்த ஊரின் பெருமையை மேலும் பறைட்சாற்றும் வகையில் வெகு பிரிசித்தம் அந்த ஊரு இட்லி.

அதனை செய்யத்தான் கொஞ்சம் கை பக்குவமும் பொறுமையும் தேவை. இந்த இடுக்கையில், "காஞ்சிபுரம் இட்லி" செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை


தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை :
  1. அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசி + பருப்பு கலவையை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.

  3. தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.

  4. புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.

  5. நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.

  6. கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.

  7. இஞ்சியையும் துருவி சேருங்கள்.

  8. அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.

  9. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

17 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

நீங்கள் டம்பளரில் வேக வைத்திருக்கிங்களா? கட்டாயம் செய்து பார்க்கனும்..

இட்லியின் வடிவம் கிடைக்கவே இந்த டம்ளர் முறையை கையாளவேண்டும். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

ரொம்ப அருமையாக இருக்கு அரிசி, உளுந்து ஒன்றிற்கு ஒன்றா

வாங்க ஜலீலா வாங்க.

எப்படி இருந்தது கொத்தமல்லி சேமியா ?

ஆஹா..காஞ்சிபுரம் இட்லி.அவசியம் செய்து பார்த்துவிடுகிறேன்.

ஸாதிகா :
முதல் முறையாக என் வலை பக்கம் வந்து உங்கள் கருத்தையும் பதிவுசெய்த உங்களை மனதார வாழ்த்துகிறேன்.

இன்றே செய்து பார்த்துவிடுகிறேன்

S மகாராஜன்- செய்துபார்த்துட்டு உங்க கருத்தை இங்கே தெரிவித்தால் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வருகைக்கு நன்றிகள்.

அண்ணே இந்த இட்லிக்கு என்ன சட்டினி செய்து சாப்பிடலாம்

செந்திலு, வேர்கடலை / வறுகடலை சட்னி இதற்கு மிக பொறுத்தமா இருக்கும்.

கோழி

கொஞ்சம் டைம் எடுத்தது. taste சூப்பர்
நல்லா இருக்கு.

அன்பு சகோதர, சகோதிரிகளே,
நீங்களும் செய்து பார்த்துட்டு உங்கள் விமர்சனம் அல்லது கருத்தை இங்கே சொன்னால் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அது எனக்கு இன்னும் பல பயனுள்ள தகவல்களை பரிமாற்ற உதவியாக இருக்கும்.

மகாராஜன் :
ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன் இது கொஞ்சம் டைம் எடுக்கும் என்று பரவாயில்லை... நீங்கள் செய்து பார்த்துட்டு உங்கள் கருத்தை எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

//# அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

# ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசியை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.//
ஒன்னா ஊறவெச்சிட்டு அரிசியை மட்டும் எப்படி எடுத்து கழுவுறது? பு.த.செ.வி

சிபியாரே, // அரிசி ...// பிழை களையப்பட்டது. நன்றிகள்.

tumbler ல் இருந்து வரவே இல்லை போங்க. வேகலைன்னு அர்த்தமோ?

http://www.virutcham.com

@Virutcham

ஆமாம் நண்பரே... நீங்கள் பாதிவெந்த நிலையில் எடுத்திருக்கிறீர்கள். முழுமையாக வந்தால்தான் டம்ளரில் அழகாக வரும்.

Post a Comment