Video

சமையல் குறிப்பு : கொத்தமல்லி சேமியா

தினமும் ஒரே மாதிரி சமையல் செய்து அலுத்துகொள்ளவதை விட, நம்மிடம் இருக்கும் பொருக்களை கொண்டு ஒரு சில வித்தியாசமான முறையில் சமையல் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் சும்மா அசத்துங்க. அந்தவகையில், இன்றைய சமையல் குறிப்பு 'கொத்தமல்லி சேமியா'.


தேவையான பொருட்கள் :
சேமியா - 1 கப்
கொத்த மல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழசாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
  1. நெய்யுடன் சேமியாவை கலந்து கடாயில் வறுத்து தனியே எடுத்துக்கொள்ளுங்கள்.

  2. 6 கப் தண்ணீரை காய வைத்து சேமியாவை சேர்த்து நன்கு வேகவிட்டு வடியுங்கள்.

  3. எண்ணையை காயவைத்து உளுத்தம்பருப்பு சேர்த்து, சிறிது வறுத்து அதில் கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சுத்தம் செய்த கொத்தமல்லி தழை, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

  4. கடாயில் நெய்யை காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, வறுத்து அரைத்த விழுதை சேருங்கள்.

  5. இந்த விழுதுடன் உப்பை தேவையான அளவு சேருங்கள். அதனுடன் வடித்து வைத்த சேமியாவை சேர்த்து நன்கு கலக்குங்கள். கொத்தமல்லி சேமியா ரெடி.

குறிப்பு :
எப்போதுமே சேமியாவை வேகவைக்கும் போது, தண்ணீர் நன்கு கொதித்தப் பின்னர் தான் சேமியாவை சேர்க்க வேண்டும். அப்போது தான் ஒன்றோடு ஓன்று ஒட்டாமல் நன்கு வேகும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

17 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

ஆரோகிய சேமியானு சொல்லுங்கள்.. ரொம்ப புதுசாக இருக்கு..ஓட்டும் போட்டாச்சு

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிநேகதி.

விடுமுறை நாளில் செய்து பாருங்கள். வாழ்க வளமுடன்.

hi kollipayan,
kandipa try pani pakren..

நன்றி சிவதர்ஷினி. உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

முதல்முறையாக என் வலை தளத்திற்கு வந்தமைக்கு மிக்க நன்றி ஷாலினி. என் பதிவை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிக்கவும். அது என்னை இன்னும் மேன்மைபடுத்தும்.

ஹேமா ரொம்ப நாளாகவே வரவில்லை. நன்றி உங்கள் வருகைக்கு.

நன்றி நாமக்கல் சிபி.

வித்தியாசமான சேமியா. ஓட்டு போட்டாச்சு நேரம் கிடைக்கும் போது எங்க பக்கமும் வாங்க

Thanks Jaleela. Sure I will come n visit you time when I have time.

This post is really superb.....Will try it at home and post u the result ;) - Raghavi

Thanks Raghavi. Try once and let me know your feedback.

Post a Comment