Video

சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை

செட்டிநாட்டு சமையல் குறிப்பு ஒன்றைத்தான் இன்று நாம் சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம். அந்த பலகாரத்தின் பெயர்தான் "மரக்கறிக்காய் தோசை". இது செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஓன்று. பலகாரத்தின் பேறே சும்மா அசத்துல்ல... வாங்க அதனை செய்வது எப்படி என்பதனை கீழே காண்போம் வாருங்கள்.


தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை கப்

காய்ந்த மிளகாய் - 8
சோம்பு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தேங்காய் துருவல் - கால் மூடி
சின்ன வெங்காயம் - அரை கப்
எண்ணெய் - ஒன்றரை கப்

செய்முறை :
  • அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை முதல் நாள் இரவு கழுவி ஊறவைக்கவும்.

  • மறுநாள் காலை, சற்றே கரகரப்பாக அரைக்கவும். இப்போது மாவு தயார்.

  • மிளகாய், சீரகம், சோம்பு, உப்பு எடுத்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.

  • சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  • அரைத்த மாவுடன், துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், அரைத்த மிளகாய் விழுதை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக்கொள்ளவும்.

  • பின்னர் அதனை சூடேறிய தோசைக்கல்லில் சிறு ஊத்தாப்பங்கலாக ஊற்றி, வேகும் முன்னை திருப்பி போட்டு அதனையும் அரை வேக்காடாக எடுக்கவும்.

  • பின்னர், வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணையை விட்டு சூடேரினதும் இந்த ஊத்தாப்பங்களை ஒன்றோண்டாக போட்டு நன்றாக சிவந்து மொருமொருவென வெந்ததும் எடுக்கவும். சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி.
நன்றி : வள்ளியம்மை பழனியப்பன்.

ஒரு வேண்டுகோள்...!
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

10 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

கலக்கல்!

படிக்கும்போதே ஆசையா இருக்கு!

வருகைக்கு நன்றி சிபி.

"KOLIPAIYAN"

இதை

"KOZHIPAIYAN"


என்று மாற்றினால் நன்றாக இருக்குமே!

அதுசரி, உங்கள் குறிப்பு எங்கள் ஊர் " ஒரப்படை " அல்லவா!!

என்ன ? கடைசியில் மீண்டும் ஒரு முறை எண்ணெய்யில் பொரிகின்றீர்கள்/

ஆக நல்ல நல பாகம்.

//KOLIPAIYAN"

இதை

"KOZHIPAIYAN"//

//ஆக நல்ல நல பாகம்.//

நள பாகம்?

Thats correct Naamakkal Sibi

this is the funny things happen while typing

Thanks

வணக்கம் கக்கு-மாணிக்கம்.

சிபியுடன் சேர்ந்து என் தவறை சுட்டிகாட்டியதற்கு 'குட்டி' & 'குட்டி' நன்றிகள்.

எங்கப்பக்கம் பருப்பு தோசை அல்லது அடைன்னு சொல்வோம் ஆனால் எண்ணையில் பொரித்தெடுக்க மாட்டோம்....ஆனால் நீங்க சொன்ன பக்குவம் சுவை கூட்டும் இன்னும் ம்ம்ம் முயற்சிக்கிறோம்...

வருகைக்கு நன்றி சகோதரி தமிழரசி.

செட்டி நாட்டிலும் இதைத் தோசையாக ஊற்றி எடுத்தால் அடை தோசை என்றுதான் சொல்லுவார்கள்.

வாங்க உத்தமபுத்திரா... நீங்க சொல்வது அடையின் பெயர். இது அதே போல தான் செய்து பிறகு எண்ணையில் பொரித்தேடுக்கணும். அதனாலே இதற்கு "மரக்கறிக்காய் தோசை" என்று பேரு.

Post a Comment