Video

கீழே விழுந்த சட்டை - முல்லா கதை

ஒரு நாள், முல்லா தமது வீட்டு மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையல் அறையில் அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார்.

மாடியிருந்த முல்லா, திடீரென கால் தவறிக் கீழே விழுந்து விட்டார்.

'தடால்' என்ற சப்தத்துடன் ஏதோ ஓன்று விழுந்த சப்தத்தை கேட்ட மனைவி திடுக்கிட்டு "அது என்ன சப்தம்" என்று கேட்டாள்.

கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தடி விட்டவாறே "ஒன்றுமில்லை. மாடியிலிருந்த என் சட்டை கீழே விழுந்துவிட்டது" என்றார்.

"ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவளவு பெரிய சத்தம் கேட்டது ?" என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"சட்டைக்குள் நான் இருந்தேன்" என்று கூறி முல்லா சமாளித்தார்.

அவர் மனைவிக்கு அழுவதா சிரிப்பத என்ற தோன்றவில்லை.
------

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

4 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

கலைவாணரைப் பற்றிச் சொல்லும் போது இப்படித்தான் சொல்லுவார்கள். துக்கத்தையும் நகைச்சுவை சேர்த்து சொல்லுவார் என்று..

ஹையா மீ த பர்ஸ்ட்... வாவ்...

வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா.

அன்பின் கோழி

நல்லாவே இருக்கு - வி.வி.சி

ஆமா மறுமொழியினை பின்தொடரும் வசதி இல்லையா

நல்வாழ்த்துகள் கோழி
நட்புடன் சீனா

Post a Comment