Video

Minotaur - ஹாலிவுட் பட விமர்சனம்

கிரீஸ் நாட்டில் மினோடார் (Minotaur ) என்ற புராதன கதை உண்டு. அதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சஸ்பென்ஸ் படம் மினோடார் (Minotaur).


படத்தோட கதை என்னனா ...

முன்னொருகாலத்தில், காளை மாட்டு முகமும் மனித உடலும் கூடிய தெய்வத்துக்கு, மினோஸ் அரசன் (Deucalion) மூன்று வருடத்திருக்கு ஒருமுறை எட்டு இளம் கிராமத்து மனிதர்களை பலிகொடுத்து வருகிறான். அவர்களை எதிர்த்து இதுவரை யாரும் முன் வந்ததில்லை.

தேன்ஸ் நகரத்து தலைவன் Cyrnan. அவனது மகன் தியோ (theo) நகரில், செம்மரிஆடுகளை மேய்த்துக்கொண்டு நகரை பாதுகாத்து வருகிறான். அதே நகரில் வசிக்கும் டிரோவுக்கு நம்ப ஹீரோவை பிடிக்காது.

இந்தவருட இளம் பெண்கள் தேடுதல் ஆரம்பிக்க, தேன்ஸ் கிராமத்து மக்கள் பயந்து ஓடி ஒளிந்து கொள்ள, அவர்களில் சிலரை வலுகட்டாயமாக மினோஸ் அரசனின் அடியாட்கள் பிடித்துக்கொண்டு செல்ல அவர்களுடன் நம்ப ஹீரோ தியோ செல்கிறான்.

அவனின் காதலியை (பியன்) இதற்கு முன்னர்தான் அந்த அரசனின் ஆட்கள் பலிகொடுக்க கடந்த முறை இழுத்து சென்றுவிட்டனர். எப்படியும் அவனின் காதலி அங்கே தான் இருப்பாள். எப்படியாவது அவளை காப்பாற்றிவிட வேண்டும் என்ற தன்னலத்துடனே செல்கிறான்.

அவர்களில் ஒரு சிலரை அரசனின் சகோதரி (Raphaella) தேர்வு செய்து ஒரு கிணறு போல இருக்கும் 'அந்த'குகையில் விட்டுவிட்டால், மினோடார் தெய்வம் அவர்களை பதம் பார்த்துவிடும்.

அரசனின் சகோதரிக்கு நம்ப ஹீரோ மேல ஒரு காதல். அவனை அடைய தனியே சந்திக்கிறாள். இதனை அறிந்த அரசன் தியோவை மினொடர் கிணறு குகையில் அடைக்கபடுகிறான்.

ஹீரோவுடன் வந்த அனைவரையும் அந்த கிணற்றில் விட்டு விட, அந்த மினோடார் ஒரு காதல் ஜோடியை ஒரு .... பண்ணிவிடுகிறது.

ஹீரோவை காப்பாற்ற நினைக்கும் அரசியும் அந்த குகைக்கு வர, ஹீரோவை சந்தித்து அந்த குகையில் இருந்து வெளிவரும் வழி காட்டுவதாக கூறி அழைத்து செல்ல, அந்த வழியை அரசன் அடைத்துவிட பிரச்னை ஆரம்பிக்கிறது.

அதன் பிறகு, ஹீரோ தன் காதலியை கண்டானா ? எப்படி மினோடரை சந்திக்கிறான் ? எப்படி தப்பிக்கிறான் ? இவனுடன் இருத்த மற்றவர்கள் கதி என்ன ? என்று DVD வாங்கி பாருங்கள்.

படத்துல என்னை கவர்த்தவைகள்...
  • ராணியாக வருபவளின் கண்கள் காமத்தையும் ஏக்கத்தையும் பளிச்சுன்னு வெளிபடுத்தும் நடிப்பு மிக அருமை.

  • ஹீரோ ஓநாயை துரத்திக்கொண்டு செல்லும் காட்சி - சுப்பர்!!!

  • Jonathan English - இயக்கிய இந்த மினோடார் + அதன் திரை வடிவமைப்பும் மிக அருமை. மினோடார்க்காக கொடுக்கப்படும் இசை. மிரட்டல்!!

  • கேமிரா மிகவும் கடுமையாக உழைத்திருக்கு. மினோடார் வரும் இடங்களில் என்னமா ஒளிபதிவு செய்திருக்கிறார். அந்த மினொடர் துரத்தும் இடங்களில் + ஹீரோ தப்பும் காட்சிகளில் ஓடும் போது கேமிரா சும்மா மிரட்டுது.

  • இந்த படத்துல வரும் அனைத்து கதா பாத்திரங்களும் மிகவும் அழகாக + அருமையாக வடிவமைத்திருப்பார் இயக்குனர்.

இந்த படத்தோட டிரைலர்


இப்படத்தில் பணிபுரிந்தவர்கள்
Directed by ... Jonathan English
Starring * Tom Hardy ... Theo
* Tony Todd ... King Deucalion
* Michelle Van Der Water ... Queen Raphaella

Music by ... Martin Todsharow
Cinematography ... Nic Morris
Editing by ... Eddie Hamilton
Distributed by ... Lions Gate
Release date(s)... March 11, 2006

மினோடார் - சஸ்பென்ஸ் மூவி பிரியர்கள் இதனை ஒருமுறை பார்க்கலாம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

5 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

நல்லா இருக்கு.. இன்னும் கொஞ்சம் விரிவா பதிவிட்டிருந்தீங்கன்னா படத்தை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டு இருக்கலாம்.

இன்னும் விரிவாக எழுத முயற்சி செய்கிறேன் நண்பா.

டப்பா படத்துக்குக்கூட டாப்பா விமர்சனம் போடறீங்களே

@சி.பி.செந்தில்குமார்

நான் பார்த்த சினிமாவை விமர்சனம் செய்தேன். அவளவு தான். சில மொக்க படத்தையும் ரசிக்க ஆள் இருக்கு நண்பரே.

நமக்கு பிடித்த எல்லா விசயங்களும் எல்லோருக்கும் பிடிக்குனு சொல்ல முடியாது இல்லையா ?

Casino no deposit bonus codes | GAMBLERSNO!
› casino-no-deposit-casino-no › casino-no-deposit-casino-no You 바카라 규칙 can also play slot games on slot machine games at one of the many online 포커 족보 casino 나비효과 sites, 토토 사이트 도메인 such as 도레미시디 출장샵 the casino.com.

Post a Comment