Video

புரட்டாசி தேங்காய் பால் சாதம்

புரட்டாசி மாதம் வார வாரம் சனிக்கிழமைகளில் ஒரே பூஜையும் அன்னதானம் தொடர்ந்து 4 அல்லது 5 வாரம் நடக்கும். அதில் ஒரு வித்தியாசமான பிரசாதம் புரட்டாசி தேங்காய் பால் சாதம் தந்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் குசிபடுத்துங்கள்.

தே‌ங்காயை வறு‌த்து அதனுட‌ன் சாத‌த்தை கொ‌ட்டி ‌கிளறுவது எ‌ளிதானதுதா‌ன். ஆனா‌ல் தே‌ங்கா‌ய் பா‌‌லிலேயே சாத‌த்தை வேகவை‌த்து செ‌ய்யு‌ம் தே‌ங்கா‌ய் பா‌ல் சாத‌த்‌தி‌ன் சுவையை ஒரு முறை பா‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் கே‌ட்கு‌‌ம்.

இனி புரட்டாசி தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-
சீராக சம்பா அரிசி - 2 கப்
தேங்காய் துருவல் - தேவைகேற்ப

பிரியாணி இலை - 1
பட்டை - 1
கிராம்பு -2

ஏலக்காய் - 2
முந்திரி - 10
திராட்சை - 10

நெய் - தேவைகேற்ப
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:-
  1. அரிசிய கழுவி நிமிடம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

  2. குக்கரில் கொஞ்சம் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

  3. இதனுடன் தேங்காய்ப்பால் கப் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. பிறகு அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பு, சர்க்கரை கலந்து குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.

  5. இதில் வதக்கிய தேங்காய் துருவல் தூவி பரிமாறவும். புரட்டாசி சனிக்கிழமை அன்று பிரசாதமாப் படிக்கலாம்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

6 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

குறிப்பு அருமை. ஆனால் அனுமதி இல்லாமல் வேறு தளத்திலிருந்து படத்தை எடுத்து போடலாமா??

மன்னிக்கவும் சகோதரி. கூகுளில் தேடிய போது கிடைத்த படம் என்பதால் படத்திற்கு உரியவரின் பெயரை என்னால் போடமுடியவில்லை. இந்த படத்திற்கு சொந்தகாரருக்கு என் நன்றிகள்.

தங்களின் விரைவான பதிலுக்கு மிக்க நன்றி. அந்தப் படம் என்னால் எடுக்கப்பட்டு, நான் சமைத்த தேங்காய் பால் சாதம் குறிப்புடன் என் ஆங்கில மற்றும் தமிழ் வலைத்தளங்களில் வெளியானது. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

http://www.kamalascorner.com/2007/01/coconut-milk-rice.html

http://adupankarai.kamalascorner.com/2009/02/blog-post_4031.html

கேள்விப்பட்டதில்லை... செய்து பார்க்கத் தூண்டுகிறது.

Thangal pagivugal mega arumai....

Post a Comment