Video

மன்மதன் அம்பு - சினிமா விமர்சனம்

அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வெளிவந்த புதிய படம் தான் (மன்)னார்-(மதன)கோபால்- (அம்பு)ஜாஸ்ரீ = மன்மதன்அம்பு.
படத்தோட கதை என்னானா ...

நடிகையான த்ரிஷாவை அவரது ரசிகரான மாதவன் காதலிக்கிறார். த்ரிஷா நடிக்கும் படமொன்றின் ஷூட்டிங்கை பார்க்கப்போன இடத்தில் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடியாக நடிக்கிறார் சூர்யா. இருவரும் ஒய்யாலே... பாட்டுக்கு ஆட்டம் போடுகிறார்கள்.

சூர்யாவுடன் த்ரிஷாவை சந்தேகம் கொள்ள ஆரம்பித்து... இருவருக்குமான வாய்த்தகராரில் கார் 'ஆக்ஸிடென்ட்' ஆகிறது. பிறகு, போலீஸுக்கு கப்பம் கட்டிவிட்டு தப்பிக்கிறார் மாதவன். மாதவன்-த்ரிஷாவுக்கிடையில் இடைவெளி விழுகிறது.

மூன்றாண்டுகளுக்கு பின் ஜெர்மனிக்கு தன் தோழி சங்கீதாவுடன் பிரமாண்ட கப்பலில் சுற்றுளா செல்கிறார் த்ரிஷா. அப்போதுதான் அசத்தலாக 'என்ட்ரி' கொடுக்கிறார் உலக நாயகன். மேஜரான கமல் தன் நண்பனின் (ரமேஷ் அரவிந்த்) ஆபரேஷனுக்காக, த்ரிஷாவை வேவு பார்க்கும் 'டிடக்டிவ்'வாக மாதவனால் நியமிக்கப்படுகிறார்.

ஒருகட்டத்தில் த்ரிஷாவிற்கு நல்ல பொண்ணு என்று மாதவனிடம் 'சர்ட்டிபிகேட்' கொடுக்கிறார் கமல். இந்நிலையில்… நீங்கதான் எதுவுமே கண்டுபிடிக்கலையே… அப்புறம் எப்படி உங்களுக்கு பணம் கொடுக்க முடியும் என மாதவன் மறுக்க… தன் நண்பனுக்காக மாதவனிடன் பணம் கறப்பதற்காக களத்திலிறருங்குகிறார் கமல். அப்போது வரும் தகிடுத்தத்தோம்.. பாடலில் தூள் கிளப்புகிறார் கமல். தியேட்டரில் விசில் சத்தம்

இந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது... கமலும் த்ரிஷாவும் என்ன ஆகிறார்கள் என்பது மீதிக் கதை.

எனக்கு பிடித்த சில நடிகர்கள்:

கமல் - அசத்தலான அறிமுகக் காட்சியில் ஆரம்பித்து, அவர் வரும் அத்தனைக் காட்சிகளிலும் பார்வையாளர்களை வசப்படுத்திவிடுகிறார். குறிப்பாக அந்த 'பிளாஷ்பேக்' காட்சியில் பிரமிக்க வைக்கிறார் கமல். தன் வயதிற்கேற்ற கேரக்டரை தேர்ந்தெடுப்பதற்கு கமலுக்கு பாராட்டுகள். எக்ஸ்-ஆர்மி மேனாக கனகச்சிதமாகப் பொருந்துகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் - 'நீலவானம்...' பாடல் பாடல் முழுக்க வாயசைப்பு 'ஃபார்வர்டில்' இருக்க, காட்சிகள் 'ரிவர்ஸில்' வருவது மிகவும் அழகு. superb sir!

த்ரிஷாவுக்கு வெகு அழகாகப் பொருந்துகிறது இந்த வேடம். 'விண்ணைத் தாண்டி வருவாயா'வில் பார்த்ததை விட இன்னும் அழகான த்ரிஷா.
த்ரிஷாவிடன் சங்கீதா பேசிக்கொண்டிருக்கும்போது தன் பையன் தூங்குவதாக பாவ்லா காட்டுவதை அறிந்த சங்கீதா, "பசங்க தூங்கறாங்கலா, இல்லையாங்கிறது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும், பசங்க தூங்கும்போது கால் கட்டவிரலை ஆட்டிக்கிட்டேதான் தூங்குவாங்க" என்று சொன்னவுடன், அந்த சுட்டிப்பயன் கால்விரலை ஆட்டுவது super!
ரமேஷ் அரவிந்த் - அடையாளமே தெரியாம வர்றார். ஆனா நல்லா நடிச்சிருக்கார். ஊர்வசி அவரோட மனைவியா வர்றாங்க.

மாதவன் சற்று வில்லத்தனம் கலந்த ரோல். சில காட்சிகளைத்தவிர படம் முழுக்க 'சரக்கு' பாட்டிலோடவே சுற்றுகிறார். இருந்தாலும் அந்த கேரக்டரை வெளுத்து வாங்குகிறார் மனுஷன். மாதவனோட முறைப்பொண்ணா - 'களவானி' ஓவியா

சங்கீதா - இரண்டு குழந்தைகளுக்கு தாய், ஆனால் விவாகரத்தான இளம் மனைவி... இந்த ரோலை இவரை விட தத்ரூபமாக வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நல்லாருக்கு. பாட்டெல்லாம் படத்தோட திரைக்கதையோட ஒட்டியே வர்றதால எதுவும் தனியா பிரிச்சு பாக்க முடியாதபடி நல்லாருக்கு பாக்கறதுக்கு.

மனுஷ் நந்தனின் கேமரா, சொகுசுக் கப்பலான 'MSC Cruise' ஐ திரையில் அழகாகக் காட்டுகிறது.

மன்மதன் அம்பு - ரொமான்டிக் காமெடிபடம்
.

9 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

உங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது!

film seems to be good!!!! ... will try to see :))

நல்லா சொல்லியிருக்கீங்க. பிடித்திருகிறது.

நிஜமாவே நல்லாருக்கா.. ஆளாளுக்கு விமர்சனம் எழுதிக் குழப்பறீங்களே.. இந்த வீக்கெண்ட் போறதா வேண்டாமா..

@விக்னேஷ்வரி

Sister, this is purely a romantic movie. Just see once.

Post a Comment