Video

ஒரு பக்க கதை - பிரசாதம் !

"ஏன் இப்படி இடிச்சிட்டு வரீங்க. அமைதியாய் நின்னு தரிசனம் பண்ணுங்களேன்." அவரின் குரல், மந்திர ஓலி, மணி ஓலியையும் மீறிக் கொண்டு கணீரென்று ஓலித்தது.
-
"வந்துட்டான்யா வலுத்த கிழவன்! இவன் மட்டும்தான் சாமியாக் கும்புடணுமோ? எங்கயும் இவனாலே இடைஞ்சல்தான்" என்றார் முதிய பெண்மணி ஒருவர்.
-
அனைவரின் கவனமும் அந்தக் கிழவரின் பக்கம் திரும்பியது. ரிஷிப வாகனம் வலம் முடிந்து இறங்கியது. தீபாராதனை ஆனதும் வாகனத்தை அலங்கரித்த மலர் பிரசாதம் பெற தள்ளுமுள்ளு! கிழவரும் பூ வாங்குவதற்கு முண்டியடித்தார்.

"கெழவனுக்கு ஏன்யா பூவு? பொம்பளைகளை வாங்கவிடாம குறுக்கே வர்றானே!" என்றார் அந்தப்பெண்மணி.
இதைச் சட்டையே பண்ணாமல் அவர் பூவை வாங்கிய பிறகே போனார். பெண்கள் பழிப்புக் காட்டினர். பூவுடன் வெளியே வந்த அவர், பிராகாரத் தூண்களில் சாய்ந்தபடி, நடக்க இயலாதவர்களாய் இருந்த வயோதிகப்பெண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பூவைக் கொடுத்தார்.
-
பிரதோஷப் பிரசாதம் பெற்ற பூரிப்பு அவர்களின் முகத்தில், உதவிய சந்தோஷம் கிழவரிடத்தில்.

நன்றி: குமுதம்



உங்கள் சிந்தனைக்கு இந்த படம். இது யார் செய்த குற்றம் ?


இந்த படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாமே !

4 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

Short story with a nice concept... i really liked it.... and please add some more like this... by Akila

கதை அருமை.

படத்தில் இருக்கும் கொடுமை நாம் செய்தது தான். ஆம். பேச்சில் பல பேருக்கு இருக்கும் பரிவு, பாசம் , உதவி செய்யும் மனப்பான்மை நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும்.

யாருக்கும் உணவையோ பணத்தையோ உதவி செய்வதை விட அவர்களுக்கு ஒரு நல்ல இல்லத்தை சேர்த்து விடலாம். இல்லையென்றால் பிச்சை எடுத்தால் வாழலாம் என்ற மனப்பான்மை மாற பிச்சையிடாமல் போகலாம். ஆம் பிச்சை போட்டு நாம் தான் அவர்களை பிச்சைக்காரர்கலாகவே வைத்து இருகிறோம்.

Post a Comment