Video

ரெட்டச்சுழி - திரை விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ரெட்டைச்சுழி படம் ரிலீஸ் என்றதும் பார்க்க முதல் நாளே தூண்டியது. இமயமும் சிகரமும் இணைந்து நடிக்கும் படம் ஆயிற்றே + டைரக்டர் சங்கர் தயாரிப்பு என்ற பெரும் எதிர்பார்ப்புடன் சென்றேன். பிறகுதான் தெரிந்தது கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று.

நாற்பது வருட பகையுடன் ஊரையே கலக்கும் இரண்டு தாத்தாக்கள்: சிங்காரவேலன்(பாரதிராஜா) & ராமசாமி (பாலச்சந்தர்) பற்றிய கதையில் ஒரு காதலை கொண்டு படம் சொல்லவந்திருக்கிறார் இயக்குனர் தாமிரா.


படத்தோட கதை என்னனா ...

இந்த தாத்தாக்களின் பகை வளர்ந்து.... இவர்களின் மகன், பேரன், கொள்ளுபேரன் என கடைக்குட்டி வாரிசுகள் வரை தொடர்கிறது.

முன்னதாக ஒரு பிளாஷ்பேக்கில்... பாரதிராஜா, அனாதையாக்கப்பட்ட ஒரு பெண் (அஞ்சலி), ஒரு ஆண்(புதுமுகம்) குழந்தையை வளர்க்கிறார். வளரும் அந்த குழந்தைகளிடையே 'குழந்தை'காதல் மலருகிறது. அதை பாரதிராஜா கண்டிக்கிறார். அந்த பையன் அங்கிருந்து பாலச்சந்தர் வீடு வருகிறான்.

இவள் வளர்ந்து, அதோ ஊரில் இருக்கும் பள்ளிக்கு ஆரிரியை ஆகிறாள். அவன் வளர்ந்து, மிலிடரியில் சேர்ந்து, ட்ரைனிங் எடுக்க அந்த ஊருக்கு வருகிறான். அஞ்சலியுடன் அவன் காதலை சொல்ல முயல்கிறான். முடியவில்லை. இதை தெரிந்த இரண்டு வீட்டு குட்டி பசங்கள், ஒன்று சேர்ந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள்.

காதலர்கள் ஓன்று சேர்ந்தார்களா? பெரிசுகளிடையே இருந்த பகை என்னவாகிறது ? என்பதனை திரையில் கண்டு களிக்கவும்.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

  • அஞ்சலி டீச்சருடன் வரும் அந்த சின்னபையன் பாராதிராஜவுடன் சரிக்கு சமமாக தோழர் என்று அழைத்து நடித்து பேசியபடி நடக்கும் அந்த சின்னபையன் சும்மா பட்டை கிளப்புகிறான். என்னமா நடித்திருக்கு இந்த வயசிலே..!

  • படத்தின் பெரிய பலம் காமிரா தான். மிஸ்டர் செழியன்... யு ஆர் தி பெஸ்ட். கிராமம் + பச்சை வயல் + நதி + மழையில் நனைத்து.. அஞ்சலி பாடும் பாடல் + பொக்கை வாய் ஹீரோக்கள் + பஞ்சாயத்து ஆலமரம் + விடியற்காலை ஆற்றங்கரை + மண்பாதை என் மனுசரின் திறமையை சொல்லிகிட்டே போகலாம்.

  • பாரதிராஜா அஞ்சலியிடம் மனம் மாறி பேசும் காட்சி + கே.பி சாரை சந்தித்து பேசும் காட்சி இரண்டும்... மனதில் நிற்கிறார். GREAT Sir!

  • நமீதாவின் போஸ்டர் + மொட்டை அடித்து காதுகுத்துவது + போனில் கல்யாணத்தை நடத்துவது .... என நிறைய இடங்களை சொல்லலாம் கே.பி சாரை பற்றி சொல்ல.

  • கருணாஸ் சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். பல நேரங்களில் காணாமல் போகிறார். சிரிப்பு போலீசா வராரு ..!

  • அஞ்சலி பாப்பாவை பற்றி அடுத்த படத்துல சொல்றேன். இதுல ஒன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லைகோ...கோ..கோ..!

  • முதல் பாதியில் என்னத்த சொல்ல வராங்க என்று புரிய மாட்டேன்குது. இரண்டாம் பாதி படம் எனக்கு பிடித்திருக்கு. கே.பீ சார் பேசும் சில இடங்கள் கடுப்பை தான் கிளப்புகிறார்.

  • இரண்டு டஜன் குழந்தைகளைக் நடிக்கவைத்து + இரண்டு மாபெரும் ஜாம்பவான்கள் ஒரு திரைக்கதையில் ஓன்று சேர்த்து படம் எடுத்த இயக்குனர் பாராட்ட படவேண்டியவர். குஷ்பு பற்றி சொல்லும் இடமெல்லாம் ஏதோ ஒரு உள்குத்து தெரிகிறது.

  • மிக அருமையான பின்னனி இசை தந்திருக்கலாம்... தரவில்லை. பாடல்களும் ஒன்றும் சுகமில்லை. கார்த்திக் ராஜா என்னாச்சு ?



ரெட்டச்சுழி - பசங்களுக்காக ஒருமுறை முடிந்தால் பார்க்கலாம்!

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

3 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

என்னை மாதிரியே நீங்களும் நொந்து போய் இருக்கீங்கன்னு தெரியுது

Post a Comment