Video

அறிவுமதி கவிதைகள் - 'வலி'

கவிதை எழுத்தாளர் அறிவுமதி அவர்களின் கவிதை தொகுப்பை படித்தேன், நேற்று இரவு. 'வலி' என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களின் உள்ள குமுறலையும் அவர்களது நிலைபாடுகளையும் தனது கவிதை வாயிலாக அவர் சொல்லும் போதே நமது மனது சேர்த்து வலிக்கத்தான் செய்கிறது.

புலம்பெயர்ந்த மக்களின் ஒட்டு மொத்த குரலாக - ஆயிரம் கதைகளை சொல்லும் இவரது கவிதை இங்கே...
முகாமிக்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது
"யாதும் ஊரே
யாவரும் கேளிர்"

வறுமை, இன்றைய ஈழ தமிழர்களின் நிலை, அவர்களது வாழ்வாதாரம் பற்றி நிலைப்பாடுகளை கவினர் இப்படி சொல்லுகிறார் தனது கவிதையில்...
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!

*

இராமேஷ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!
நாங்கள்
குதித்து
கரையேறுகிறோம்!
உயிருடன் இருக்கும் போது தான் காசு, பணம், வீடு என் அலையும் மனிதர்களுக்கு இவாறு சொல்கிறார்.
பிறந்த குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!
தினம் தினம் மரண செய்திகளை படிக்கும் நமக்கே தாங்கிகொள்ளமுடியவில்லையே ... தம் குடுப்பத்தை இழந்த- ஈழ தமிழர்கள் நிலையை அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் தான் புரியும், உண்மை நிலையும் அதன் வலி தெரியும்.
இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீங்கள்!
நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம் !

நன்றி : அறிவுமதி

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

0 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

Post a Comment