Video

வேங்கை - விமர்சனம்

"சிங்கம்" படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு இயக்குனர் ஹரியும், தேசிய விருது பெற்று தந்த ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ்சும் முதன் முதல் இணைந்து வெளிவரும் படம் வேங்கை. தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.


படத்தோட கதை என்னானா...

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பாமரக்குலம் என்னும் கிராமத்தில் கதை துவங்குகிறது. ராஜ் கிரண் அந்த பகுதியில் வாழும் பெரும் புள்ளி. அவரது மகனாக வருகிறார் தனுஷ்.

ராஜ் கிரணுக்கும், ராஜ் கிரண் ஆதரவில் MLA ஆகும் பிரகாஷ்ராஜுக்கும் ஒரு புதிய இரயில் நிலையம் கட்ட வேண்டும் என்ற பிரச்சனையில் கருத்து வேறுபாடு துவங்குகிறது. ராஜ்கிரனின் ஆதரவால் MLA ஆனதால் தன்னால் எதையும் பேச முடியவில்லை என கோபமடையும் பிரகாஷ்ராஜ், ரயில் போகும் பாலத்தில் குண்டு வைக்கிறார்.

அந்த பழியை தூக்கி பக்கத்துக்கு கிராமத்தின் மீது போட்டு இரு கிராமத்திற்கும் கலவரம் உண்டாக்க முனைகிறார் , இந்த குண்டு வெடிப்பிலிருந்து இரயிலையும், அதிலுள்ள பயணிகளையும், பத்திரமாக காப்பாற்றுகிறார் தனுஷ். அது மட்டுமில்லாமல், அந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து ஒப்படைகிறார்.

இந்த பகைக்கு பழி வாங்கும் முயற்சியாக, தனுஷை போட்டுத் தள்ள முயல்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால், அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும் பிகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள்.

இதில் யார் ஜெயித்தார்கள் என்பதை தன் பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார் ஹரி.


எனக்கு பிடித்த சில...

தனுஷ் - செல்வம் என்ற பாத்திரத்தில் முதல் பாதி வழக்கமான வேலை வெட்டியில்லாமல் சுற்றி வம்பை விலைக்கு வாங்கும் இளைஞன். இரண்டாவது பாதி சவால் + ஆக்ஷன் மசாலாவில் வேங்கையாக சீறுகிறார்.

தமன்னா - ஒன்றும் பெரிய ரோல் இல்லை. பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் சோகமாகவே இருக்கிறார்.

கஞ்சா கருப்பு - சைக்கிளுக்கு ஹான்டில்பார் பென்டு எடுக்கும் காட்சிகள் அருவருக்க வைக்கிறது.


ராஜ்கிரண் - நன்றாக நடித்திருக்கிறார். படத்துல சும்மா ஜம்முனு இருக்கார். ஒரே மாதிரி கதாபாத்திரத்தில் இன்னும் எத்தனை படம் நடிப்பர்னு தெரியல.

பிரகாஷ் ராஜ் - புதியதாக எதுவும் இல்லை. டம்மி வில்லன். செருப்பால் போட்டோவில் இருக்கும் அவரை அடிக்கும் காட்சி - மிக பெரிய கைதட்டல். பருப்புல ஒசந்தது முந்திரி, பதவில ஒசந்தது மந்திரி என்று பிரகாஷ் ராஜ் பேசும் சீரியஸ் வசனங்கள் காமெடியாக இருக்கிறது.

தேவி ஸ்ரீ தேவி - ரெடிமேட் பின்னணி இசை. புதுசா ஏதாவது யோசிக்க கூடாதா ? படத்தை போலவே இசையும் ஒரே மாதிரி. முடியல...

V.T.விஜயன் ஹரிக்கு இன்னொரு வலது கரம். காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடிவது இவரது வேகமான 'கட்'களால் தான்!

வெற்றியின் காமிரா கலக்கல். 'க்ளைமாக்ஸ் ஃபைட்' கண்டிப்பாக ஆக்சன் விரும்பிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும்.

ஹரி - சில காட்சிகள் அவரது முந்தைய படங்களை நினைவூட்டுவதை அவர் கொஞ்சம் தவிர்க்கலாம். ஒரே மாதிரியான திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது.
படத்தின் பலம் படம் வேகமாக விறுவிறுப்பாக செல்வதுதான். அதே அருவாள் + டாடா சுமோ + வெள்ளைவேட்டி + வெள்ளை சட்டை என்று நாம் ஏற்கவனே பார்த்த விசயங்களாக இருந்தாலும் அலுப்புதட்டவில்லை.

குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கை இந்தப் படம் தருகிறது.


வேங்கை - வழக்கமான கமர்சியல் படம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

0 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

Post a Comment