Video

சமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்

முட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :
முட்டை - 5
சர்க்கரை - அரை கப்
தேங்காய்ப்பால் - அரை கப்
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் - கால் கப்

செய்முறை :
  1. முதலில் முந்திரியை சிறிய துண்டுகளாக ஒடித்துகொள்ளுங்கள்.

  2. இந்த ஒடித்த முந்திரி துண்டுகளை சிறிது நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  3. முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேங்காய்ப்பால் + சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி/அடித்துக் எடுத்துக்கொள்ளுங்கள்.

  4. இப்போது வருத்த முந்திரியை சேர்த்து நன்கு கலக்குங்கள்.

  5. பெரிய தட்டு அல்லது ஏந்தலான பாத்திரம் ஒன்றில் ஊற்றி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேகவிடுங்கள். இப்போது சுவையான 'முட்டை வட்டில் அப்பம்' ரெடி.

  6. கத்தியால் வெட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாரவேண்டியது தான் பாக்கி. சும்மா பஞ்சு போல அருமையான மென்மையான ருசியான அப்பம் இருக்கும்.
ஒரு வேண்டுகோள்
என்ன உடனே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...? சபாஸ்!

செய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

7 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

நல்லாயிருக்கு இந்த ரெசிப்பி மேலும் புது ரெசிப்பிக்களை காண இங்கே வாங்க
http://www.tamilkudumbam.com/
நன்றி

நன்றி தமிழ்குடும்பம்.

அரைக்க தேவையான பொருள் என்று இருக்கிறது, அது எதற்கு என்று குறிப்பிடவில்லையே

Iskcon.... Its my editing fault. Now its corrected. Please check it. Thanks for your notification.

செய்து விடுகிறேன்

இன்னைக்கு செய்து பார்த்துட்டு சொல்றேனே...

செய்து பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை இங்கே தெரிவியுங்கள். வாழ்த்துக்கள் மகாராஜன் & தமிழரசி.

Post a Comment