Video

திரும்பிபார்கிறேன் : கோபுரங்கள் சாய்வதில்லை - விமர்சனம்

மணிவன்னனில் முதல் படம். கோபுரங்கள் சாய்வதில்லை. பெண்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து படம் எடுத்ததற்காகவே அவரை பாராட்டலாம்.

படத்தோட கதை என்னனா ...

வெற்றியம்பதி கிராமம். வெள்ளந்தி மனிதர்களும் வெகுளிபெண்னும் நிரந்த கிராமம். அங்கே...
"புவனேஷ்வரியக்கா எதுக்கு போடலகாய்க்கு கல் கட்டிவிடறாங்க..?"
"வளையாம நெளியாம நீட்டமா வளரதாண்டி"
"அப்ப நானும் என் சடைக்கு கல் கட்டிவிட்ட அது வளையமா இருக்கும் தானே ..?".

கதாநாயகி அருக்காணி அறிமுகம்.
மஞ்சக்குளி மஞ்சக்குளி மாரியம்மா - அட
பொங்கவெக்க கோவிலுக்கு வாடியம்மா...
அருக்காணி. அந்த கிராமத்தில் உள்ள பொண்டுகளுக்கு ஒரு எடுபிடி. வெகுளி பெண். நிறமோ கருப்பு. வானத்தை பார்க்கும் அவளது சடை. அதில் கலர் கலராய் ரிப்பன். ஊரில் உள்ள சில பெண்கள் இவளுக்கு அமையும் கணவன் அழகாக சும்மா ராஜா போல இருப்பான்னு சொல்ல சொல்ல மனதில் ஒரு வித கற்பனை.

நாயகியின் சடையை, நிலையை பார்த்து அவளது தோழிகள் கிண்டலும் கேலியும் செய்தபடி அருகாணியை ஓட்ட... ராஜா சார் ஒரு பாட்டு போடுங்க...
வாடியம்மா வெளஞ்ச பொண்ணு - அட
வெளஞ்ச கரும்பு கொள்ல
எலி போல எம்புதடி மேல உன்னை எந்த பையன் கட்டிகுவாண்டி..?
பெண் பார்க்க வந்தவர்கள் இவளின் நிலைகண்டு ஓட, தந்தையோ இவளின் நிலைகுலைந்து போகிறார்.

தனது உடைகளை கரையில் வைத்து விட்டு கடலில் வினுசக்ரவர்த்தி குளிக்கும் போது ஒரு திருடன் அதை எடுத்து சொலும்போது ஒருவர் தடுக்கிறார். பிறகு தான் தெரிகிறது அவர் இவரது நண்பர் என்று. நலம் விசாரித்து, பேசி, இருவரும் சம்பந்தியாக முடிவெடுகிறார்கள். அது தெரியாமல்...

ஆபீஸ் நண்பர்களுடன் ரோமியோ போல சுற்றும் நம்ப ஹீரோ முரளி, தனக்கு வரபோகும் மனைவி பற்றி சக நண்பர்களுடன் கூறிவிட்டு வீட்டு வருகிறார். தந்தை திருமண நாளை சொல்ல, ஹீரோ பெண் பற்றி கேட்க, தந்தைக்கு கட்டுப்பட்ட ஹீரோ வேறு வழியில்லாமல் நடக்கிறது அருகானியுடன் திருமணம்.
முதலிரவு. கட்டிலில் முரளி. மனதில் நினைத்த மனைவி கிடைக்காத சோகத்தில். எதிபார்க்காத கணவன் அருகானிக்கு.

அருக்காணியின் செயல்களால் ஹீரோ ரொம்ப நொந்து போக, அந்த நேரத்தில் அவனுக்கு டெல்லியில் சிறந்த விற்பனையாளர் விருது கிடைக்க, வாங்க சொன்ற இடத்தில் ஜூலியை சந்திக்கிறார். பார்த்தும் மனது அவளிடம் பறிபோகிறது (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடிச்சு ....). சென்னை வருகிறார்.

பெங்களுரு ஆபீஸ் சென்ற ஹீரோவுக்கு ஜுலியின் நட்பு அதிகரித்து. தனது வீட்டிலேயே தங்கி - நட்பு வருகிறது.
புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன்
இதற்காக தானே நான் புடிச்சேன்....
உயர் பதவி கிடைக்கிறது ஹீரோவுக்கு. போக மறுக்கிறார். பிறகு நட்பு - லவ்வாகி - கல்யாணம் செய்துவிடுகிறார். எதுவும் ஜூலிக்கு தெரியாமல் மறைத்து. ஒரு லவ் சாங் வருது இங்கே....
பூ வாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே...
தந்தையின் வற்புறுத்தலால் அருக்காணியை பெங்களுரு அழைத்து வரும்போது - ரயில்வே ஸ்டேஷன் இல் ஜுலி. ஹீரோ, அருக்காணியை விட்டு விட்டு - ஜுலி உடன் வீடு வந்து - மீண்டும் அருக்காணியை தேடி ரயில்வே ஸ்டேஷன் வந்து கிடைக்காமல் - வீடு வந்து பார்த்தல் - அங்கே அருக்காணி.

அருக்காணிக்கு அப்புறம் தான் தெரிகிறது, தனது கணவர் ஜூலியை திருமணம் செய்த்கொண்டுள்ளார் என்று. என்ன செய்ய..? இடிந்து போகிறாள். இந்த விஷயம் தனது தந்தைக்கோ அல்லது மாமனாருக்கு தெரியக்கூடாது என்று முடிவெடுத்து அங்கேயே வேலைகாரியாக....

தன் கண் முன் தனது கணவனை இன்னொரு பெண் சொந்தம் கொண்டாடுவது நினைத்து நினைத்து ...
எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
சொந்தம் தான் என்று தான் நினைத்தேன்
இந்நிலையில் அருக்காணியின் தந்தையும் ஹீரோவின் தந்தையும் இவர்களுது வாழ்க்கையை காண பெங்களூர் வர - படம் விறுவிறுபாகிறது.

ஜூலிக்கு அருகாணியின் கணவன் யாரெண்டு தெரிந்ததா? ஹீரோவின் இரட்டை வேஷம் கலைந்ததா? இப்படி பல கேள்விகள் கேட்டால் நான் சொல்லும் ஒரே பதில் நல்ல DVD-ஆ வாங்கி பாருங்க / TV-ல் இந்த படத்த மறக்காம பாருங்க..

படத்துல எனக்கு பிடித்த சில ..
  • ஜுலியாக ராதா. ரொம்ப அழகா + சிறப்ப நடித்து இரண்டாம் பாதிபடத்த இவர்தான் சுமக்கிறார்.
  • முரளியாக 'மைக்' மோகன். மனுஷன் நவரசத்தையும் காட்டி நடித்துள்ள மிக சிறப்பான படம் இது. அதுவும் அருக்கானியுடன் திருமணம் நடக்கும் இடம். சபாஸ்.
  • அருக்கானியாக சுகாசினி. முதல் பாதியில் கறுத்த தேகத்துடன் வளைந்த சடையுடன் + இரண்டாம் பாதியில் பிரெஷா வந்து ஹீரோ மனசுல இவள்மீது லவ் வரவைக்கும் நடிப்பு.
  • கடைசி நிமிட வசனம். மணிவண்ணன் நிற்கிறார் அங்கே. நல்ல திரைக்கதை. மணிவண்ணன் இயக்குனராக அறிமுகமான படம்.
  • வினுசக்ரவர்த்தியின் கம்பீரமான நடிப்பு கூடுதல் சிறப்பு.
  • இசை. வேறு யாரு நம்ப இளையராஜா தான். பாடல்களை விட பின்னணி இசையில் கலக்கியிருப்பார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் எனக்கு போட்ட போதும்.

1 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

I have seen this movie. Sugasini acting is too good.

Post a Comment