Video

நான் ரசித்த மூன்று கவிதைகள்!!!

சில நாட்களுக்கு முன்னர் வலையில் உலா வந்த போது என் கண்ணில் சிக்கிய சில கவிதைகள் உங்களால் பார்வைக்கு.....

அல்லது - பெண்!

கருவில் சுமந்து
உயிர் கொடுத்த தாயாக!
அல்லது,
அவளே என்னைப் படைத்த
கடவுளாக!

கைப் பிடித்து
கொஞ்சி விளையாடும் சகோதரியா!
அல்லது,
அவளே எனக்கு பாசவலையிட்ட
உயிராக!

உணர்வை பகிர்ந்து
இறுதிவரை தோள்கொடுத்த தோழியாக!
அல்லது,
அவளே என்னை உற்சாகமூட்டவந்த
தேவதையாக!

மனதை திருடி
உயிருடன் கலந்த காதலியாக!
அல்லது,
அவளே எனக்கென்று பிறந்த
அழகியாக!

மாலையிட்டு மணக்கோலத்துடன்
வாழ்க்கையை பகிரவந்த மனைவியாக!
அல்லது,
அவளே எனக்கு மற்றுமொரு
தாயாக!

கொஞ்சும் மொழியில்
என்னை மறக்கசெய்யும் மகளாக!
அல்லது,
அவளே எனக்கு இறைவனளித்த
பரிசாக!

இந்த உலகை
சொர்க்கமாக்க வந்த பெண்களாக!
அல்லது,
இவர்கள் இல்லா உலகம்
சூன்னியமாக!

- sipi


வானத்துக்கு மேலே...

மரத்தடியில் நிற்காமல்
மரமாகவே நின்றுகொண்டும்

பூக்களையெல்லாம் பறிக்காமல்
பூக்களாகவே சிரித்துக்கொண்டும்

வண்டுகளை விரட்டாமல்
வண்டாக தேனுறிஞ்சிக்கொண்டும்

மழையில் நனையாமல்
மழையாகவே நனைந்துகொண்டும்

பறவைகளை வீழ்த்தாமல்
பறவையாகவே சிறகுவிரித்துக்கொண்டும்

சரித்தரங்களை படிக்காமல்
சரித்தரம் படைத்துக்கொண்டும்

வானம்பாடிகளை தேடாமல்
வானம்பாடியாக பாடிக்கொண்டும்

சங்கீதம் கேட்காமல்
சுரங்களாகவே மாறிக்கொண்டும்

ரத்தசத்தங்கள் இல்லாமல்
மாந்தர் கண்படாமல்

மந்திரஉலகம் இருக்குமா?
வானத்துக்கு மேலே?

-மோ.அபிலாஷ்


இமயம் வேண்டாம்...

எனக்கு இமயம் வேண்டாம்
குன்று போதும்
அல்லது
ஒரு கல்துண்டு மட்டும்!

எனக்கு கங்கை வேண்டாம்
நீரோடை போதும்
அல்லது
இலையில் ஓர் துளி மட்டும்!

எனக்கு வானம் வேண்டாம்
மேகம் போதும்
அல்லது
ஒரு நட்சத்திரம் மட்டும்!

எனக்கு ஆழ்கடல் வேண்டாம்
அலைகள் போதும்
அல்லது
அதன் சிதறல் மட்டும்!

எனக்கு பெருமழை வேண்டாம்
தூறல் போதும்
அல்லது
மண்வாசம் மட்டும்!

எனக்கு வைரம் வேண்டாம்
பவளம் போதும்
அல்லது
ஒரு முத்து மட்டும்!

எனக்கு நூலகம் வேண்டாம்
புத்தகம் போதும்
அல்லது
ஒரு தாள் மட்டும்!

எனக்கு மதங்கள் வேண்டாம்
கடவுள் போதும்
அல்லது
மந்திரச்சொல் மட்டும்!

எனக்கு சூரியன் வேண்டாம்
நிலவு போதும்
அல்லது
ஒரு மின்மினி மட்டும்!

எனக்கு காதல் வேண்டாம
நினைவுகள் போதும்
அல்லது
ஒரு முத்தம் மட்டும்!

எனக்கு சரித்திரம் வேண்டாம்
சம்பவங்கள் போதும்
அல்லது
ஒரு சாகசம் மட்டும்!

எனக்கு மெத்தைகள் வேண்டாம்
தாய்மடி போதும்
அல்லது
ஆறடி பூமி மட்டும!

இவை எல்லாம் நடக்க வேண்டாம்
எல்லோரும் நினைக்கவாவது வேண்டும்
அல்லது
இப்படி நிழல்களில் மட்டும்!

-அபிலாஷ்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

3 பேரு கருத்து சொல்லியிருங்காங்க:

அற்புதமான சிந்தனை...

தாங்கள் ரசித்த கவிதையை நானும் ரசித்தேன்..
வாழ்த்துக்கள்...

@கும்மாச்சி,
@கவிதை வீதி... // சௌந்தர் //
வருகைக்கு நன்றி !!!

Post a Comment